சிவகார்த்திகேயனின் வளர்ச்சி.. வயிறு எரிந்த ஞானவேல்?.. மீண்டும் ஆரம்பித்த பஞ்சாயத்து.. விட்டு வெளுக்குறாங்க

சென்னை: சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்துவருகிறார். அவர் தயாரித்த கனா, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் எல்லாம் நல்ல பெயரை பெற்றிருக்கின்றன. அவர் இப்போது ராதிகாவை வைத்து தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். பிப்ரவரி 20ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரானதை பார்த்து பிரபல தயாரிப்பாளர் மோசமாக பேசியதாக ரங்கராஜ் பாண்டே சொல்லியிருப்பது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கிறது. திறமையும், உழைப்பும், பொறுமையும் இருந்தால் கண்டிப்பாக நாமும் சிவா மாதிரி வளரலாம் என்ற எண்ணத்தை பலருக்கும் உண்டு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நடிகராகவே அவர் பத்து படங்கள் தாண்டமாட்டார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் அடித்து உடைத்து 25 படங்கள் நடித்துவிட்டார். நடிப்பதோடு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்துவருகிறார்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு: எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் என அவர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியபோது; அவர் நடிக்க வந்த புதிதில் எப்படி அவரை கிண்டலும், கேலியும் செய்தார்களோ அதே மாதிரிதான் பலரும் செய்தார்கள். வழக்கம்போல் அதை எஸ்கே காதில் போட்டுக்கொண்டாலும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. மாறாக தரமான படைப்புக்களை கொடுத்து கிண்டல் செய்தவர்களை எல்லாம் வாயடைக்க வைத்துவிட்டார். அவர் தயாரித்த கனா, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றி பெற்றனவோ இல்லையோ விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றன.

Senior Producer Mocked Sivakarthikeyan for Starting a Production House Reveals Rangaraj Pandey
Photo Credit:

தாய் கிழவி: இப்போது அவர் ராதிகாவை லீடு ரோலில் வைத்து தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். ஆண் பாவம் பொல்லாதது படத்துக்கு கதை எழுதிய சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்பது அதனுடைய டீசர், மேக்கிங் வீடியோவை எல்லாம் பார்க்கும்போது தெரிந்தது. குறிப்பாக ராதிகாவின் கெட்டப் அனைவரையும் மெர்சல் செய்திருக்கிறது. நிச்சயம் இப்படத்துக்காக ராதிகா பல விருதுகளை அள்ளுவார் என திரைத்துறையின் அனுபவஸ்தர்கள் அடித்து கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரங்கராஜ் பாண்டே சொன்னது: இந்நிலையில் அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ராதிகாவை பேட்டி எடுத்தார் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே. அப்போது அவர், "சிவகார்த்திகேயன் தயாரிக்க ஆரம்பித்தபோது ஒரு பிரபலமான தயாரிப்பாளர் என்னிடம், 'இவர் நான்கு படங்கள்தான் நடித்திருக்கிறார். அதற்குள் என்ன தயாரிப்பு கம்பெனி ஆரம்பிக்கிறார்' என சொன்னார். அது எனக்கு பெரிய ஷாக்கிங்காக இருந்தது. அவர் சீனியர் தயாரிப்பாளர். சிவா தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்தது அவரை தொந்தரவு செய்துவிட்டது" என்றார்.

யார் அந்த தயாரிப்பாளர்?: ரங்கராஜ் பாண்டே இப்படி சொன்னது சோஷியல் மீடியாவில் புது விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. அதாவது எஸ்கேவை அப்படி சொன்ன தயாரிப்பாளர் ஞானவேல்தான். ஆரம்பத்திலிருந்தே அவரது வளர்ச்சி ஞானவேலுவுக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி ரங்கராஜ் பாண்டே அந்தத் தயாரிப்பாளரின் பெயரை சொல்லாவிட்டாலும்; அவரது பாடி லாங்குவேஜ் ஞானவேலுவை உணர்த்துவதாகத்தான் இருக்கிறது என பலரும் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஞானவேலுவுக்கு ஏன் இந்த வயிற்றெரிச்சல். இப்படி அடுத்தவரின் வளர்ச்சியை பார்த்து பொறுமியதால்தான் அவர் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துகொண்டே இருக்கிறார் எனவும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X