Death: திரைத்துறையில் சோகம்.. சத்யராஜ் மேனேஜர் தயாரிப்பாளர் ராமநாதன் மறைவு!

சென்னை: பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் M.ராமநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி காலை காலமானார். அவருக்கு வயது 72. சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவரது தயாரிப்பில் , வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி,பிரம்மா, உடன் பிறப்பு, வில்லாதி வில்லன் ஆகிய படங்களில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க ,பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்ச்செல்வன் படத்தையும் ராமநாதன் தயாரித்துள்ளார்.

Senior Producer Sathyaraj Former Manager Ramanathan Demise Due To Illness

அவருக்கு பிரமிளா என்ற மனைவியும், காருண்யா, சரண்யா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் சென்னை வந்ததும் புதன்கிழமையன்று சென்னையில் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யராஜ்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரது மறைவு சத்யராஜ்க்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் திரைத்துறையில் கடந்த சில வாரங்களாகவே அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. மூத்த இயக்குநர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் தனது 48வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன் பின்னர் மூத்த நடிகர் ராம்குமார் காலமானார். தற்போது மூத்த தயாரிப்பாளர் ராமநாதன் மறைந்துள்ளார். இப்படி ஒருசில வார இடைவெளிகளுக்குள்ளாகவே அடுத்தடுத்து மரணங்களால் திரையுலகம் சோகத்தில் உள்ளது.

More from Filmibeat

Read more about: death sathyaraj ramanathan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X