பயப்படாம தடுப்பூசி போடுங்க..உடம்புக்கு நல்லது.. செந்தில் வைரல் வீடியோ !

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் செந்தில், நலமாக இருப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் அவரது மகனும் உடன் இருக்கிறார்.

செந்தில் மட்டும் இல்லாமல் அவரது மனைவி மற்றும் மகன்கள் மற்றும் மருமகள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரிப்பு

நாளுக்கு நாள் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சொல்வதும் அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

நடிகர் செந்திலுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் மட்டுமின்றி அவரது மனைவி, மகன், மருமகளுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாரும் பயப்படவேண்டாம்

யாரும் பயப்படவேண்டாம்

இந்நிலையில்,நடிகர் செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம். எனக்கு கொரோனா வந்தது உண்மை தான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. டெஸ்ட் எடுத்துக்கிட்டு வீட்டில் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். டாக்டர் சொன்ன மருந்து, மாத்திரையை சாப்பிடுங்க.

உடம்புக்கு நல்லது

எனக்கு கார்பரேஷன்ல ஊசி போட்டதால் தான் பெரிய அளவுக்கு பாதிக்கவில்லை. அதே மாதிரி நீங்களும் ஊசி போட்டுக்கங்க. உடம்புக்கு அவ்வளவு நல்லது. நாளைக்கு அடுத்த டெஸ்ட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க. நெகட்டிவ்னா வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கச் சொன்னாங்க. பயப்படத் தேவையில்லை. வாழ்க வளமுடன் என தெரிவித்துள்ளார். செந்திலின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X