வெளியானது செந்தில் கணேஷ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: ஹீரோவான பாடகர்

சென்னை: பாடகர் செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களைப் பாடி அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர் செந்தில் கணேஷ். டைட்டில் வின்னரானதற்குப் பிறகு பல நல்ல வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.

Senthil Ganesh debut movie!

சீமராஜா திரைப்படத்தில் பாடினார். பிறகு பிரபுதேவா நடித்துள்ள சார்லி சாப்ளின் 2 படத்தில் செந்தில்-ராஜலட்சுமி இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

அடுத்தடுத்து பல படங்களில் பாடி வருகிறார். தற்போது கரிமுகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

செல்ல தங்கையா இயக்கும் இப்படத்தில் செந்திலுக்கு ஜோடியாக கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்த காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்திலும் செந்தில் ஒரு பாடலைப் பாடி அசத்தியுள்ளாராம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முகநூலில் வெளியிட்டுள்ளார். அதோடு நடிகர் தம்பிராமையாவை விழாவுக்கு அழைத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

செந்தில் கணேஷுக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X