செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம்.. பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது!
சென்னை: தற்போது தமிழ் சினிமாவை எத்தனை காமெடி நடிகர்கள் கலக்கி வந்தாலும் 80,90 களில் கவுண்டமணி-செந்தில் கூட்டணி தான்.
கிட்டத்தட்ட 15 வருடங்கள் தமிழ் சினிமாவில் ஜாம்பவன்களாக வலம் வந்த கூட்டணி கவுண்டமணி-செந்தில் கூட்டணி.
பல காமெடி நடிகர்கள் வந்தாலும் இன்று வரையில் கவுண்டமணி-செந்தில் கூட்டணியின் காமெடியை மக்கள் தவறாமல் ரசித்து வருகின்றனர்.

250+ திரைப்படங்கள்
சுமார் 250 படங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்திருந்தாலும் செந்தில் ஹீரோவாக நடித்ததில்லை. முதல் முறையாக இந்த படத்தில் தான் செந்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

வலுவான கதை
2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. வலுவான கதைகளத்தை கொண்டு இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற சுரேஷ் சங்கையா தான் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

பிரேம்ஜியுடன் கூட்டணி
ஒரு கிடாயின் கருணை மனு படத்தை தொடர்ந்து சுரேஷ் சங்கையா பிரேம்ஜியுடன் கூட்டணி அமைத்துள்ளார். பிரேம்ஜி ஹீரோவாக சுரேஷ் சங்கையா சத்திய சோதனை எனும் படத்தை இயக்கியுள்ளார். சத்திய சோதனை குறித்த வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஆயுள் கைதி
இதைத்தொடர்ந்து செந்திலை வைத்து அடுத்த படத்தை எடுக்க தொடங்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயுள் தண்டனை முடிந்து கிராமத்துக்கு வரும் நபராக செந்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











