கணவருக்காக செந்திலுடன் சண்டை போட்ட மருமகள்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: கவுண்டமணியும் சேர்ந்த்து தமிழ் சினிமாவின் காமெடி சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தவர் செந்தில். இரண்டு பேரும் சேர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்தார்கள். கவுண்டமணி கவுண்ட்டரிலும், டைமிங்கிலும் கலக்க; செந்திலோ தனது பாடி லாங்குவேஜ், எதார்த்தமான நடிப்பை வைத்து கலக்கிக்கொண்டிருந்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்தார். இந்தச் சூழலில் அவரது மகன் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகிய்ருக்கிறது.

ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் சிறிய ரோலில் தோன்றினார் செந்தில். அதனைத் தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை வைத்து அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி பெரிய வெளிச்சமும் கிடைக்காமல் இருந்தது. எப்படியாவது ஒரு பிரேக் கொடுக்கக்கூடிய ரோல் கிடைத்துவிடாதா என்ற நிலையில் மலையூர் மம்பட்டியான படத்தில் கவுண்டமணியுடன் நடித்தார்.

பிரிக்க முடியாத கூட்டணி: அந்த ரோல் செந்திலுக்கு பெரும் வெளிச்சத்தை கொடுத்தது. தொடர்ந்து கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் செந்தில். இரண்டு பேரின் காம்போவும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர் என அவர்கள் நடித்த ஏராளமான படங்கள் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டணி போல் அவர்களுக்கு பிறகு யாரும் தமிழ் சினிமாவில் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Senthil s daughter-in-law has been fighting with him over her husband

செந்திலின் பிளஸ்: செந்திலின் பலங்களில் ஒன்றே அவரது வெகுளித்தனமான பேச்சும், முகமும், பாடி லாங்குவேஜும்தான். ஊர்க்காரர் ஒருவர் நடிப்பது போன்று இருக்கும் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை தங்களில் ஒருவராகவே ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக கவுண்டமணியிடம் அவர் கேட்கும் சந்தேகங்கள், அவ்வப்போது கவுண்டமணியை காண்டாக்கும்படியான வசனங்கள் எல்லாம் சிரிப்பு சரவெடியை பற்ற வைப்பவை. அதேபோல் கவுண்டமணியும், செந்திலும் பிரிந்து சில படங்களில் நடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செந்திலுடைய குடும்பம்: செந்திலுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பல் மருத்துவராக இருக்கிறார். இதற்கிடையே செந்திலுக்கு வயோதிகம் காரணமாக சினிமா வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தன. அதனையடுத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்திருந்தார் செந்தில். படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

Take a Poll

மகனும் ஹீரோ: செந்திலை போலவே அவரது மூத்த மகனான மணிகண்ட பிரபு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். பாபி சிம்ஹா தயாரித்த தடை உடை படத்தில்தான் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் பேசுகையில், "படத்தின் இயக்குநர் கதை சொல்வதற்காக வந்தார். அப்பாவிடம் அவர் கதை சொல்லும்போது கதையில் உங்கள் பையன் இப்படி செய்கிறார் அப்படி செய்கிறார் என்று சொன்னார்.

அப்பாவுக்கு புரியவில்லை: சரி கதையில் வரும் பையன் என்றுதான் அப்பா நினைத்தார். இயக்குநர் கதையை சொல்லி முடித்தவுடன், நான் அப்பாவிடம், 'அந்தக் கதையில் பையன் கேரக்டர் செய்யப்போகும் நடிகர் நான்தான்' என்று தெரிவித்தேன். அவர் சில நிமிடங்கள் பார்த்து குழப்பமாக சரி ரைட்டு என்று கூறினார். இருந்தாலும் அவருக்கு இஷ்டம் இல்லை. அப்போது எனது மனைவிதான் அப்பாவிடம் நீங்கள்தானே படிப்பை முடித்துவிட்டு பேஷனை நோக்கி போ என்று சொல்லியிருந்தீர்கள் இப்போது என்ன சண்டை போடுவார். பிறகுதான் அப்பா முழு மனதோடு ஒத்துக்கொண்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X