செம.. சேர்த்து வச்சுட்டாங்கப்பா.. திருமண கோலத்தில் ரஞ்சித்- பிரியா ராமன்.. பூரித்துப்போன ரசிகர்கள்!
சென்னை: நடிகர் ரஞ்சித்தையும் அவரது மனைவி பிரியா ராமனையும் செந்தூரப்பூவே சீரியலில் சேர்த்து வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரஞ்சித். நடிகர் ரஞ்சித், நடிகை பிரியா ராமனுடன் நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தார்.

திருமணம்
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதனை தொடர்ந்து 1999ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரியா ராமனும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் விவாகரத்து
ரஜினிகாந்தின் வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரியா ராமன், சூர்யவம்சம் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். இந்நிலையில் ரஞ்சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2014ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

செந்தூரப்பூவே சீரியலில்
இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் வேலையில் பிஸியாக இருந்து வந்தனர். நடிகை பிரியா ராமன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலிலும் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வந்தனர்.

ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் தங்களின் திருமண நாளில் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ரஞ்சித்துடன் பிரியா ராமன்
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலின் புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரஞ்சித்துடன் அவருடைய மனைவி பிரியா ராமனும் இணைந்து நடித்துள்ளார்.

புதுமண தம்பதி
இருவரும் திருமண கோலத்தில் காரில் வந்து இறங்க, வாழ்க்கை நல்லா இருக்கணும் வம்சம் விருத்தியாகணும் என பெரியவர்கள் கூற பூஜை அறையில் விளக்கேற்றுகிறார் பிரியா ராமன்.
Recommended Video

கடைசி நாள் வரை..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடல் பின்னணியில் ஒலிக்க, வாழ்க்கையில் இணைந்த முதல் நாளில் இருக்கும் சந்தோஷம் கடைசி நாள் வரை இருக்க வேண்டும் என உருக்கமாக கூறுகிறார் ரஞ்சித். செந்தூரப்பூவே சீரியலின் இந்த புரமோவை நடிகர் ரஞ்சித் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சூப்பர் புரமோ
இதனை பார்த்த ரசிகர்கள், சூப்பர் புரமோ என பூரித்து போயுள்ளனர். மேலும் 1999ஆம் ஆண்டு அவர்களின் திருமணத்தில் பங்கேற்க முடியாதவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. அவர்களின் பிள்ளைகளான ஆகாஷும் ஆதியும் சந்தோஷப்படுவார்கள் என்றும் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











