twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குறும்படம், டிஜிட்டல் படங்களுக்காக புதுபட அதிபர் சங்கம்!

    By Shankar
    |

    சென்னை: தமிழ் சினிமாவில், டிஜிட்டல், குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் நல சங்கம் என்ற பெயரில் புதுபட அதிபர்கள் சங்கம் உருவாகியுள்ளது.

    இச்சங்கத்தின் தலைவராக கலைப்புலி சேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இந்த சங்கம் குறித்து கலைப்புலி சேகரன் கூறுகையில், "திரைப்படத்துறை டிஜிட்டல் மயமாகியுள்ளதால் பத்து லட்சம் ரூபாய்க்கும் படம் எடுக்க முடிகிறது. இப்படி எடுக்கப்படும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதில்தான் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. தியேட்டர்களும் கிடைப்பதில்லை. எனவே சிறு பட்ஜெட் மற்றும் குறும்படம் ஆவண பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக இச்சங்கம் துவங்கப்பட்டுள்ளது.

    Separate council for Digital and short film makers

    குறும்பட ஆவண படங்களை இச் சங்கத்தில் பதிவு செய்யலாம். இச்சங்கத்தில் இருந்தவர்கள் எடுக்கும் படங்களில் யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம். சுதந்திரமான அமைப்பாக இது செயல்படும். அரசிடம் பதிவும் செய்யப்பட்டுள்ளது," என்றார்.

    தமிழ் இலக்க திரைப்பட குறும்பட ஆவண பட தயாரிப்பாளர் சங்க துவக்க விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.மற்றும் டி.ஜி.தியாகராஜன், ஞானவேல்ராஜா, தியாராஜன், அருள்பதி, ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    English summary
    A new film producers council has been launched for digital and short film makers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X