செப்டம்பர் மாதம்.... அணிவகுக்கும் புதுப் படங்கள்.. காணாமல் போகும் நல்ல படங்கள்!
தமிழ் சினிமாவில் வாரா வாரம் வெள்ளியன்று வெளியாகும் புதுப் படங்களின் எண்ணிக்கை சந்தோஷம் தந்தாலும், அவற்றில் சில நல்ல படங்கள் கூட கண்டு கொள்ளப்படாமல் போவதை நினைத்தால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களைப் போலவே சினிமா ரசிகர்களும் கவலை கொள்ள வேண்டியுள்ளது.
மேகா என்ற படம் இரு வாரங்களுக்கு முன் வெளியானது. அந்த வாரம் வெளியான மற்ற படங்களைக் காட்டிலும் அது நல்ல படம்தான். நன்றாக செலவு செய்து ரசனையோடு எடுக்கப்பட்ட அந்தப் படம் வந்த சுவடே தெரியவில்லை. தயாரிப்பாளர் ஆன்லைனில் வெளியிடுவதாக அறிவித்துவிட்டார். எத்தனை பெரிய கொடுமை இது.
காரணம், அடுத்தடுத்து இடைவெளியே இல்லாமல் வெளியாகும் புதுப்படங்கள்.

பட்டையக் கெளப்பணும் பாண்டியா
இந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி (கடந்த வாரம்) ஆறு படங்கள் வெளியாகின. அவற்றில் மூன்று கொஞ்சம் பெரிய பட்ஜெட் படங்கள். பட்டைய கெளப்பணும் பாண்டியா, அமர காவியம் மற்றும் பொறியாளன்.

சிகரம் தொடு
இந்த வாரம் (செப் 12) முக்கியமான மூன்று படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. அவை: விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் மற்றும் புதுமுகங்கள் நடித்த பர்மா.

அரண்மனை
செப்டம்பர் 19-ம் தேதி பாபி சிம்ஹா நடித்த ஆடாம ஜெயிச்சோமடா, சுந்தர் சியின் அரண்மனை உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

மெட்ராஸ்
செப்டம்பர் 26-ம் தேதி பெரிய பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள கார்த்தியின் மெட்ராஸ் ரிலீசாகிறது. அந்தப் படத்துடன் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீவா, விஜய் சேதுபதி நடித்த வன்மம் போன்ற படங்களும் வெளியாகின்றன.

வாலிப ராஜா
இவை தவிர, திருடன் போலீஸ், சந்தானத்தின் வாலிப ராஜா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள நம்பியார் போன்ற படங்களும் இந்த மாதமே ரிலீசாகக் காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











