கோலிவுட்டில் இப்போ இரண்டாம் பாக ஜூரம்!

By Shankar

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாரிப்பது ஹாலிவுட்டில் பல காலமாக இருந்து வரும் வழக்கம். அதே வழக்கம் பாலிவுட்டையும் பற்றிக் கொண்டது.

இப்போது கோலிவுட்டில் ரீமேக் மற்றும் இரண்டாம் பாக ஜூரம் வேகமாகப் பரவி வருகிறது.

பில்லா..

பில்லா..

இதற்கு பிள்ளையார் சுழி போட்டது, பில்லா ரீமேக்தான். இந்தியில் அமிதாப் நடித்த பில்லாவை ரஜினிக்காக தமிழில் பல ஆண்டுகளுக்கு முன் ரீமேக் செய்தனர். பின்னர் அதே படத்தை, அதே பெயருடன் அஜீத்தை வைத்து ரீமேக் செய்தனர். அதன் இரண்டாம் பாகத்தையும் சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினர்.

சிங்கம் 2

சிங்கம் 2

சூர்யா நடித்த சிங்கம் பெரும் வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தின் தொடர்ச்சி சிங்கம் 2 என வெளியாகி, அதுவும் வெற்றி பெற்றது.

நான் அவன் இல்லை

நான் அவன் இல்லை

பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த நான் அவனில்லை படத்தை, ஜீவனை வைத்து மீண்டும் ரீமேக் செய்தார் செல்வா. அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் அதே ஜீவனை வைத்து எடுத்து வெளியிட்டார். பீட்சா படத்துக்கும் இரண்டாம் பாகம் வெளியானது, சமீபத்தில்.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

இப்போது பல படங்களுக்கு இரண்டாம் பாகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கமல் ஹாஸன் தனது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார்.

ஜெய்ஹிந்த் 2

ஜெய்ஹிந்த் 2

அதேபோல நடிகர் அர்ஜூன் பல ஆண்டுகளுக்கு முன்பு தான் தயாரித்து இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் 2 எனும் பெயரில் இயக்கி நடிக்கிறார்.

ஜித்தன் 2

ஜித்தன் 2

ஆர்பி சவுத்ரியின் மூத்த மகன் ரமேஷ் நடித்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ஜித்தன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சத்தமின்றி உருவாக்கி வருகிறகார்கள், ஹீரோ அதே ஜித்தன் ரமேஷ்தான்!

ஏய் 2

ஏய் 2

சரத்குமார் - நமீதா - வடிவேலு நடித்த ஏய் படம் அன்றைக்கு பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படக் காட்சிகள் இப்போது பார்த்தாலும் சுவாரஸ்யமாகவே உள்ளன. இப்போது அந்தப் படத்துக்கு ஏய் 2 என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் தயாரிக்க ஆயத்தமாகிறார்கள். ஹீரோ - சரத்குமார்!

ஜீன்ஸ் 2

ஜீன்ஸ் 2

ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் - ஐஸ்வர்யா ராய் நடித்த ஜீன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஜீன்ஸ் 2 என்ற தலைப்பில் உருவாகிறது. அநேகமாக இதனை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குவார் எனத் தெரிகிறது.

கலகலப்பு 2

கலகலப்பு 2

2012-ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கலகலப்பு படத்துக்கும் இரண்டாம் பாகம் தயாராகிறது. சுந்தரின் அரண்மனை படம் முடிந்ததும் இந்த கலகலப்பு 2 படப்பிடிப்பு தொடங்குகிறது.

சிறுத்தை 2

சிறுத்தை 2

அடுத்து கார்த்தி - தமன்னா நடித்து வெளியான சிறுத்தை படத்தின் இரண்டாம் பாகம். இந்தப் படத்தை வீரம் சிவா இயக்கப் போகிறார். (ஹீரோயின் தமன்னாவா என்பதை ஹீரோவான் தந்தைதான் முடிவு செய்ய வேண்டும்!)

மன்மதன் 2

மன்மதன் 2

சிம்பு நடித்த மன்மதன் படத்துக்கும் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாம். ஆனால் அவரது இப்போதைய படங்கள் நான்கு இழுத்துக் கொண்டிருப்பதால், மன்மதன் 2 இப்போதைக்கு இருக்காது என நம்பலாம்.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

ரஜினியின் சந்திரமுகி 2 பற்றி அவ்வப்போது செய்தி வருவது வாடிக்கை. இந்த விஷயத்தில் இயக்குநர் பி வாசு தீவிரம் காட்டினாலும், ஹீரோ சூப்பர் ஸ்டார் மவுனமே சிறந்தது என அமைதி காக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X