கன்ஃபார்ம்.. இந்த மூன்று ஹிட் படங்களின் 2ம் பாகமும் வருது.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே!

சென்னை: சூதுகவ்வும், தெகிடி மற்றும் மாயவன் படங்களின் இரண்டாம் பாகம் கண்டிப்பா வரும் என தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி. குமார் அறிவித்துள்ளார்.

Recommended Video

4 படங்களின் part-2 | காத்திருந்த Sequel படங்கள் Ready | Thirukumaran

விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்க்ரிப்ட் வொர்க் பணிகள் நிறைவடைந்து விட்டதாக சமீபத்தில் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சி.வி. குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், ரீசன்ட்டாக அடுத்து எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி இருந்தார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

சி.வி. குமார் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிகப்படியான ரசிகர்கள் நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கே பலரும் ஆதரவு அளித்தனர். சிலர், தெகிடி 2ம் பாகம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மூன்றுமே

கருத்துக் கணிப்புக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் சி.வி. குமார், சூது கவ்வும் 2, தெகிடி 2, மாயவன் 2 ஆகிய மூன்று படங்களின் ஸ்க்ரிப்ட் வொர்க் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மூன்று படங்களையுமே தங்கள் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என பதிவிட்டுள்ளார்.

சூது கவ்வும்

சூது கவ்வும்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் திரைப்படம் நடிகர் விஜய்சேதுபதிக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை அளித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘காசு, பணம், துட்டு, மணி, மணி' பாடல் பட்டித் தொட்டியெங்கும் பயங்கர ஹிட் அடித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிசியாக இருக்கும் விஜய்சேதுபதியை மீண்டும் அந்த கடத்தல் டானாக பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தெகிடி

தெகிடி

சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அசோக் செல்வனுக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரம் கொடுத்த படம் தெகிடி இந்த ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில், மீண்டும் அசோக் செல்வன் காட்டில் அதிர்ஷ்ட மழை அடித்து வருகிறது. நிச்சயம் தெகிடி 2 ரசிகர்களை முதல் பாகத்தை போலவே சீட் நுனிக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

மாயவன்

மாயவன்

தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாயவன் படம் மூலமாகத்தான் சி.வி. குமார் சேஞ்ச் ஓவர் ஆனார். அதனால், தனது ஃபேவரைட் படமான மாயவன் படத்தின் இரண்டாம் பாக கதையையும் சி.வி. குமார் தயார் செய்து வைத்துள்ளார் என்றே தெரிகிறது. சந்தீப் கிஷன், ஜாக்கி ஷெராஃப், லாவண்யா திரிபாதி நடிப்பில் வெளியான மாயவன் படத்தின் அடுத்த பாகத்தை எதிர்பார்த்தும் கோலிவுட் சினிமா காத்துக் கிடக்கின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X