பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று என்ட்ரியாகும் பிரபலம்.. இந்த வாரம் அனல் பறக்கும்.. ஷிவானிதான் பாவம்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்றைய எபிசோடில் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழையும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 48 நாட்களை கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்தனர்.
அதேநேரத்தில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஸ்டார் ஹோட்டலில் தனிமை
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்டு கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர் ஆசிம் பங்கேற்க உள்ளார் என கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியானது. ஆசிம் கொரோனா சோதனை முடிந்து 15 நாட்கள் குவாரண்டைனில் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

வைல்ம் கார்டு என்ட்ரி
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சுச்சி வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இன்றைய எபிசோடில் சுசித்ரா வெளியேறுவது ஒளிபரப்பப்படும். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆசிம், வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிமுடன் காதல்
இன்றைய எபிசோடில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பது தெரியவரும். ஆசிமும் பாலாஜியும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் இணைந்து நடித்தனர். அந்த சீரியலின் போது ஷிவானிக்கும் ஆசிமுக்கும் காதல் என தகவல் பரவியது.

திடீரென விலகிய ஷிவானி
ஆனால் ஷிவானிதான் ஆசிமை ஒன் சைடாக காதலித்தார் என்றும் ஆசிம் அவரது காதலை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனிடையே ஷிவானி அந்த சீரியலில் இருந்து திடீரென பாதியிலேயே விலகினார்.

இன்ஸ்டாவில் பிஸி
இதனை போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டே பெரும் பிரபலமானார் ஷிவானி. அவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே 22 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

மீண்டும் ஒருதலை காதல்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானி சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸை ஒருதலையாக காதலித்து வருகிறார். பாலாஜி மீது ரொம்ப பொஸஸிவ்வாக உள்ளார் ஷிவானி நாராயணன்.

அனல் பறக்கும்
தற்போது ஷிவானியின் எக்ஸ் லவ்வரை பிக்பாஸ் வீட்டுக்குள் விட்டு அவரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கப் போகிறார் பிக்பாஸ். இதனால் வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











