5 ரூபாய் சம்பளம்.. சாப்பாட்டுக்கே வழியில்லை.. நடிகர் அபிஷேக் ஷங்கரின் கண்ணீர் கதை!
சென்னை: சீரியல் நடிகர் அபிஷேக் ஷங்கர் தனது வாழ்க்கையில் சந்தித்த மோசமான பிரச்சனை குறித்து கண்ணீருடன் பேசி உள்ளார்.
மோகமுள் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான அபிஷேக் ஷங்கர் 1995ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் குடும்பம், கோலங்கள், கல்கி போன்ற பிரபலமான தொடர்களிலும் நடித்துள்ளார்.
மோகமுள்: நடிகர் அபிஷேக் ஷங்கர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மோகமுள் படத்தில் ஹீரோவாக நடித்து விட்டேன். ஆனால், அந்த படம் வெளியாகுமா... ஆகாதா என்பது தெரியாது. அந்த படம் திரைக்கு வரவே பல்வேறு பிரச்சனைகள் வந்ததாம். 100 பிரிவியூ ஷோ போட்டார்கள், ஆனால் ஒருவர் கூட ரிலீசுக்கு ஓகே சொல்லவில்லை.
5 ரூபாய் சம்பளம்: அப்போது எனக்கு தங்குவதற்குகூட இடம் இல்லாமல் என் நண்பர் வீட்டில் தங்கிக் இருந்தேன். அப்போது, ஒரு நண்பரின் மூலம் எனக்கு translator வேலை கிடைத்தது. ஆங்கிலம், ஹிந்தி translate செய்தால் ஒரு பக்கத்திற்கு 5 ருபாய் கிடைக்கும். வேலை கிடைப்பதை பொறுத்து 50 ருபாய் வரை கிடைக்கும். அந்த பணத்தை வைத்துக்கொண்டு சின்மையா நகரில் இருந்து நடந்தே தேவி தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பேன் அப்போது டிக்கெட் இரண்டு ரூபாய் 90 காசு.
சாப்பாட்டுக்கே வழியில்லை: பல நாள் என்னுடைய உணவு டி, பிஸ்கெட்தான். அதன் பின் இருக்கும் மீதி காசை சேர்த்து, மும்பையில் இருக்கும் காதலியிடம் பேசுவேன் அதற்கு காசு வேண்டும் என்பதற்காக பணம் சேர்த்து வைப்பேன். நான் ஹீரோவாகி விட்டேன் என மும்பையில் நினைத்தார்கள், ஆனால் நான் இங்கே காசுக்கு சிங்கி அடித்துக்கொண்டு இருந்தேன்.
8 ஆண்டு காதல்: என் மனைவியை முதல் முதலில் ஒரு இசை நிகழ்ச்சியில் தான் பார்த்தேன், அவள் மிகவும் வசதியான வீட்டு பெண், நன்றாக படித்தவள், திறமையானவள் ஆனால், நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், எங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. இருந்தாலும் வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்பதால், எட்டு ஆண்டுகள் காத்து இருந்து பின் திருமணம் செய்து கொண்டோம் என்று அபிஷேக் ஷங்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











