நடிகை திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு.. ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.. ஆடியோவை வெளியிட்ட அர்னவ்!
சென்னை : நடிகர் அர்னவிற்கு பல பெண்களுடன் தொடர்பு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய நடிகை திவ்யாவுக்கு அர்னவ் ஆடியோ மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் அர்னவ் திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்டு பிரிந்தனர்.
அர்னவ் தன்னை அடித்ததாக காவல்நிலையத்தில் புகார் கூறியதை அடுத்து அர்னவ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடிக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார்.

திவ்யா ஸ்ரீதர் : இதையடுத்து, இரண்டு மாதத்திற்கு முன் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், ஈகோவை விட்டுவிட்டு குழந்தைக்காக இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்றும், குழந்தையை பாருங்கள் என்றும் பலரும் அர்னவிற்கு அறிவுரை கூறி இருந்தனர்.
பல பெண்களுடன் தொடர்பு : இதையடுத்து, நடிகை திவ்யா ஸ்ரீதர் அர்னவ் மீது அடுக்கடுக்கான புகாரை கூறினார். அதில், அர்னவ் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர், திருநங்கையுடன் தொடர்பு வைத்திருந்தவர், ஜெஸ்டின் என்ற இளைஞருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தார். மேலும் அர்னவுடன் ஓரினச்சேர்க்கையில் இருந்த ஜெஸ்டின் என்ற அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் என்றுதிவ்யா அர்னவ் மீது புகார்களை கூறியிருந்தார்.
தகாத உறவில் இருந்தார்: திவ்யாவின் இந்த குற்றச்சாட்டு இணையத்தில் காட்டுத் தீ போல பரவியதை அடுத்து, அர்னவ் ஆடியோ ஒன்றை வெளியிட்டு சரியான பதில் அடி கொடுத்துள்ளார். அதில், திருமணமான 45 நாட்கள் நானும் திவ்யாவும் பேசவே இல்லை. அதற்கு காரணம் அவர் வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்தார். இநத விஷயம் எனக்கு தெரியவந்தபோதுதான் நான் திவ்யாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்.
இந்த வாழ்க்கைக்கு என்ன பெயர் : நானும் திவ்யாவும் ஐந்து ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம், என்னிடம் ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னார். ஆனால், எங்கள் திருமணத்திற்கு முன்பு தான் அவருக்கு விவாகரத்து நடந்துள்ளது. கணவர் இருப்பதை மறைத்து 15 நாட்கள் என்னோடும், 15 நாட்கள் ஊரில் அவர் கணவரோடும் வாழ்த்து இருக்கிறார். இந்த வாழ்க்கைக்கு என்ன பெயர்.

இரவு பார்ட்டி : அதேபோல் நான் சிறைக்கு சென்ற போது இரவு பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார் திவ்யா. செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்து வந்த விரக்தியில் நான் இருக்கிறேன். பெண் குழந்தை பாதிக்கப்படுமே என்பதால் தான் திவ்யாவின் தகாத உறவை பற்றி நான் வெளியில் சொல்லவில்லை. ஆனால் இப்போது அவர் என்னை இவ்வளவு தரக்குறைவாக பேசிவிட்டார். ஆனால் காலம் வரும்போது திவ்யா யாருடன் தகாத உறவில் இருந்தார் என்பதை நிச்சயம் சொல்லுவேன்.
நிரூபிக்க தயாரா? நான் ஓரினச்சேர்க்கையில் இருந்ததாகவும் ஜெஸ்டின் என்ற அந்த இளைஞர் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார். அப்படி அவர் இறந்திருந்தால் அவரது இறப்பு சான்றிதழை காட்ட வேண்டும் அது திவ்யாவிடம் இருக்கா. திவ்யா இறந்துவிட்டதாக சொல்லும் ஜெஸ்டின் என்பவர் ஒரு மாடல், அவர் உயிருடன் தான் இருக்கிறார், விரைவில் அவரை நான் உங்களுக்கு காட்டுகிறேன் என்று அர்னவ் கூறியுள்ளார். சில நாட்கள் ஓய்ந்து இருந்த இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











