காதலியை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய அழகு சீரியல் 'திருநா'.. வாழ்த்து மழை பொழியும் ரசிகாஸ்!
சென்னை: பிரபல சீரியல் நடிகரான அவினாஷ் தனது காதலியை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் திருநா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அவினாஷ்.
இதில் ரேவதி - தலைவாசல் விஜய் ஜோடியின் கடைசி மகனாக துடிப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அம்மன் சீரியல்
கொரோனா லாக்டவுன் நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்த சீரியல் அதன் பிறகு தொடரவில்லை. இதனைத் தொடர்ந்து அவினாஷ் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன் சீரியலில் அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

போட்டோஸ்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவினாஷ், அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். தான் வொர்க்கவுட் செய்யும் வீடியோக்கள் போட்டோக்கள் முதல் பிரபலங்களுடன் எடுத்துக்கொள்ளும் போட்டோக்கள் வரை என அனைத்தையும் ஷேர் செய்து வருகிறார்.

காதலியுடன் ரொமான்ஸ்
அந்தவகையில் கடந்த சில நாட்களாக அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் அதிக கவனத்தை பெற்று வருகிறது. காரணம், அவினாஷ் தனது காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை ஷேர் செய்து, காதலி தெரெசாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பீச்சில் காதலியுடன்..
பீச்சில் தனது காதலியுடன் சேர்ந்து எடுத்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ள அவினாஷ், நான் இப்போது உன்னை நேசிப்பதை விட அதிகமாக நேசிக்க முடியாது என்று சத்தியம் செய்கிறேன், ஆனால் நாளை நான் இன்னும் செய்வேன் என்று எனக்குத் தெரியும் என பதிவிட்டுள்ளார்.

பல ஆண்டு ரிலேஷன்ஷிப்
அவினாஷும் தெரெசாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக உள்ளனர். பல ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இவர்கள் தற்போது முதல் முறையாக தங்களின் காதலை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இவர்களின் காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











