24 வயது பெண்ணுடன் குழந்தை பெத்துப்பேன்..அது எனது ஆசை..2வது திருமணம் குறித்து பப்லு விளக்கம்!

சென்னை : நடிகர் பப்லு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிங்காக பேசப்பட்டு வருகிறது.

57வயதான பப்லு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா, காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என இணையத்தில் பப்லுக்கு எதிராக பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்த விவகாரம் புயலை கிளப்பியதை அடுத்து நடிகர் பப்லு 2வது திருமணம் குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரிந்துவிட்டோம்

பிரிந்துவிட்டோம்

என் முதல் மனைவி பீனாவை காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டேன். என் மகன் அகத் அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். நானும் எனது மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டதால், எங்களால் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க முடியவில்லை. தினமும் சண்டை வந்ததால், நான் தனியாக வந்துவிட்டேன். ஆனால், மாதத்திற்கு ஒரு நாள் என் மகனை வெளியில் சந்திப்பேன்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

கடந்த 6 வருடமாக தனியாக வசித்து வருகிறேன். இதனால், எனக்கு மன அழுத்தம், வலி என மனதளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். மன அழுத்தத்தால் திடீரென இறந்துவிட்டால் என்ன செய்வது என்று பல நாள் வீட்டின் கதவு, ஜன்னல் கதவுகளை திறந்தே வைத்துக்கொண்டு தூங்கி இருக்கிறேன்.

வயது ஒரு நம்பர் தான்

வயது ஒரு நம்பர் தான்

இந்த சூழ்நிலையில் தான் நான் அந்த பெண்ணை சந்தித்தேன் அந்த பெண் என்னை விரும்புகிறாள். எனக்கு பிறகு தனது மகனை அவள் நிச்சயம் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வயது என்பது ஒரு நம்பர் நான் இப்போதும் அழகாகவே இருக்கிறேன். வயதானவனை ஏன் லவ் காதலித்தாய் என்று நானும் அந்த பெண்ணிடம் பல முறை கேட்டு இருக்கிறேன் அதற்கு அவள் உங்களின் வயது எனக்கு தெரியவில்லை, நீங்கள் மட்டும் தான் எனக்கு தெரிகிறீர்கள் என்றாள்.

குழந்தை பெத்துக்கொள்வேன்

குழந்தை பெத்துக்கொள்வேன்

என் முதல் மனைவி பீனாவிடம் இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பல முறை பேசி இருக்கிறேன். ஆனால், அவர் என் மகனின் நிலைமையை பார்த்து வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். ஆனால், இந்த பெண்ணுடன் இரண்டாவதாக குழந்தை பெத்துக்கொள்ள விரும்புகிறேன் எனக்கு அந்த ஆசை இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை. இந்த வயதில் தான் காதல் வரவேண்மா என பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்

விவாகரத்து கிடைத்துவிட்டது

விவாகரத்து கிடைத்துவிட்டது

என் முதல் மனைவி பீனாவிடம் இந்த பெண்னை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசினேன் அவர், இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. 24 வயது பெண் என்பது தான் பீனாவிற்கு வருத்தம் இத்தனை ஆண்டுகள் விவாகரத்து வாங்காமல் இருந்தோம். இனி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்றார். ஏற்கனவே 6 வருடங்கள் பிரிந்து இருந்ததால் ஒரு மாதத்திலேயே டைவர்ஸ் கிடைத்து விட்டது.

லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்

லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்

இன்னும் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை, இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம். நான் யாருக்கும் எப்போதும் துரோகம் செய்தது இல்லை, அதே போல இந்த பொண்ணுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்று நடிகர் பப்லு தனது இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X