சீரியல் நடிகர் பரத் கல்யாணின் மனைவி மரணம்...கோமாவிலேயே உயிர் பிரிந்தது!

சென்னை : சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரியதர்ஷினியின் மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாளை காலை பிரியதர்ஷினியின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரியல் நடிகர் பரத் கல்யாண்

சீரியல் நடிகர் பரத் கல்யாண்

மறைந்த பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன் தான் பரத் கல்யாண். தனது தந்தையைபோல சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் அறிமுகம் ஆனார்.கன்னட திரை உலகில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் பரத் கல்யாண், தமிழில் ஜென்டில்மேன், ஆதிலட்சுமி புராணம் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பல சீரியல்களில்

பல சீரியல்களில்

சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால், சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய பரத் கல்யாண், அபூர்வ ராகங்கள்,வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜமிலா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

உயிரிழந்தார்

உயிரிழந்தார்

இந்நிலையில்,பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி இன்று அதிகாலை 5 மணி அளவில் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பேலியோ டயட்டை பின்பற்றிய போது அவருக்கு சர்க்கரை நோய் அதிகரித்தது. இதற்காக மருத்துவமனையில் கடந்த மூன்று மாதமாக சிகிச்சை எடுத்து வந்தநிலையில் உடல் நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

நாளை இறுதிச்சடங்கு

நாளை இறுதிச்சடங்கு

இதையடுத்து, இன்று கோமா நிலையிலேயே அவரது உயிர்பிரிந்துள்ளது. 43 வயதே ஆன பிரியதர்ஷினியின் மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பரத் கல்யாண் மற்றும் பிரியதர்ஷினி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பரத் கல்யாண் மனைவி மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X