Dinesh: ஆபாச மெசேஜ் அனுப்பவில்லை.. சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாக சீரியல் நடிகர் தினேஷ் வருத்தம்!

சென்னை: சீரியல்களில் இணைந்து பணியாற்றிய ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்தனர்.

விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்திருந்த இவர்கள் இருவரும் காதலித்து பின்பு திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Serial actor Dinesh wants to join again with Actress Rachitha

ரச்சிதாவுடன் மீண்டும் இணைய தினேஷ் விருப்பம்: சீரியல்களில் இணைந்து நடித்து, அதன்மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் காதலித்து நிஜ வாழ்க்கையிலும் இணைந்துவரும் பல ஜோடிகள் காணப்படுகின்றனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் தினேஷ் மற்றும் ரச்சிதா. இவர்கள் இருவரும் விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது திருமணத்தில் முடிந்த நிலையில் அனைவரும் மெச்சும்வகையில் ஆதர்ச தம்பதிகளாக இவர்கள் வலம் வந்தனர்.

எங்கு சென்றாலும் இணைந்தே செல்வது என இவர்களின் இணக்கம் அனைவரையும் கவர்ந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக இவர்கள் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தினேஷ் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக கூறி, ரச்சிதா போலீசில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விஷயத்தை நடிகர் தினேஷ் மறுத்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் சூழலில், ரச்சிதாவுடன் இணைந்து வாழ விருப்பம் கொண்டு தான் தொடர்ந்து அவருக்கு மெசேஜ் அனுப்பி வருவதாகவும் ஆனால் அவர் பதில் மெசேஜ் அனுப்பாமல் இருந்ததாகவும் தினேஷ் தெரிவித்துள்ளார். அதுபோலத்தான் தற்போதும் ரச்சிதாவிற்கு தான் மெசேஜ் அனுப்பியதாகவும் ஆபாசமாகவோ திட்டியோ மெசேஜ் அனுப்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Serial actor Dinesh wants to join again with Actress Rachitha

ஆனால் காவல்நிலையத்தில் ரச்சிதா நடந்துக் கொண்ட விதத்தை பார்க்கும்போது தாங்கள் மீண்டும் சேர வாய்ப்பில்லை என்பது தனக்கு தற்போது தெரிந்துவிட்டதாகவும் தினேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். மகான், பிரிவோம் சந்திப்போம், புது கவிதை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம் என விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களில் அடுத்தடுத்த தொடர்களில் நடித்து வந்த தினேஷ் சிறிது காலங்கள் சீரியல்களில் கமிட்டாகாமல் இருந்தார்.

தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ஜிகே என்ற கேரக்டரில் வில்லிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தினேஷ். எப்போதும் ரச்சிதாவுடன் இணைந்து வாழ்வதையே இவர் விரும்புவதாக பல பேட்டிகளில் குறிப்பிட்டு வந்துள்ளார். ஆனால் தங்களின் விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரையில் சென்றதால், தினேஷும் ரச்சிதாவும், இருவரும் சட்டப்பூர்வமாக பிரியவுள்ளதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X