5 ஆண்டு போராட்டம்.. விவாகரத்து கிடைத்தது.. இனி என் வாழ்க்கையை வாழ்வேன்.. சீரியல் நடிகர் மகிழ்ச்சி!

சென்னை: சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தெரிந்த முகமாக இருக்கும் ஈஸ்வர், தனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகால போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இனி நான் என் வாழ்க்கையை வாழ்வேன் என மனைவியை பிரிந்ததை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கல்யாணப்பரிசு தொடர் இவருக்கு மிகப்பெரிய புகழையும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து, அருவி தொடரில் அம்மா சொல்லை தட்டாத பாத்திரத்தில் ஈஸ்வர் ரகுநாதன் அம்பிகாவின் மூத்த மகனாக நடிக்கிறார். இவர், நடிகை ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், கணவர் தன்னை கொடுமை படுத்துவதாக ஜெயஸ்ரீ போலீசில் புகார் கொடுத்தார். மேலும், ஈஸ்வர் மகாலட்சுமி என்கிற சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்று ஜெயஸ்ரீ புகார் கூறியிருந்தார்.

serial actor eshwar jayashree

ஜெயஸ்ரீ-ஈஸ்வர்: நடிகை ஜெயஸ்ரீ கொடுத்த புகாரை தொடர்ந்து, ஈஸ்வர் கைது செய்யப்பட்டு, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அதற்குப் பிறகு அவர் ஜாமினில் வெளிவந்தார். ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவரும் தனித்தனியாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் விவாகரத்து வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஈஸ்வர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் ஜெயஸ்ரீக்கும் விவாகரத்து கிடைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

serial actor eshwar jayashree

இனி என் வாழ்க்கையை வாழ்வேன்: அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயஸ்ரீக்கும் தனக்கும் இடையேயான செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்துவிட்டதாகவும், இனி என் விருப்பப்படி வாழ்க்கையை வாழ உள்ளேன். நடிப்பில் தான் நான் கவனம் செலுத்த போகிறேன். இந்த சவாலான காலகட்டத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த கடவுளுக்கு நன்றி.

சோதனையான காலம்: இந்த விவாகரத்து தொடர்பாக எந்த ஒரு பேட்டியும் அளிக்க மாட்டேன். 5 ஆண்டு போராட்டமான சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள் என்று ஈஸ்வர் பதிவிட்டுள்ளார். ஈஸ்வர் இவ்வாறு பதிவிட்டு இருக்கும் நிலையில், நடிகை ஜெயஸ்ரீ இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X