For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணத்திலயே குறை வருது... கலை நிகழ்ச்சியில குறை இருக்காதா? கண்டுக்காதீங்க - நடிகர் ரவிவர்மா

|

சென்னை: கல்யாண வீட்டிலேயே சின்னச் சின்ன குறை இருக்கும். சின்னத்திரை நடிகர்கள் நடத்திய முதல் கலை நிகழ்ச்சியில் குறை இருக்கத்தான் செய்தது அதை பெரிதுபடுத்தாமல் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம் என்று சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார்.

அண்மையில் மலேசியாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பிரம்மாண்டமான கலை விழா நடைபெற்றது. வெற்றிகரமாக நடந்த அவ்விழாவையொட்டி அந்தச் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா வெளியிட்டுள்ள அறிக்கை:

Serial Actor Ravivarma Thanked for Everyone

தொலைக்காட்சிகள் மூலம் இல்லந்தோறும் சென்றடைந்திருக்கும் சின்னத்திரை கலைஞர்களின் புகழை நாடறியும். ஆனால் அவர்களின் உரிமைகளுக்காக சங்கம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தது. நினைவில் வாழும் நடிகர் எஸ்.என்.வசந்த்தின் முயற்சியால் 2003ஆம் ஆண்டில் சின்னத்திரை நடிகர் சங்கம் உருவானது. சங்கம் உருவாகி பல ஆண்டுகள் ஆனாலும் சங்க வளர்ச்சிக்கு என்று பெரிதாக எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாமல் இருந்தது.

Serial Actor Ravivarma Thanked for Everyone

நான் 2019ஆம் ஆண்டில் பதவியேற்ற பிறகு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நலனுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்தேன். அதன் விளைவாக சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சின்னத்திரை கலைஞர்களுக்கென்று ஒரு கலை நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்தோம். அதன்படி மலேசியாவில் 28.9.2019 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பி.ஜி.ஆர்.எம். அரங்கில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் மிகப் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

வெற்றிகரமாக நடந்த இந்த நட்சத்திரக் கலை நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் பங்கேற்றனர். மலேசிய நாட்டு கலைஞர்களும் தமிழ்த் திரையுலகக் கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக்கிப் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.

3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்!

இந்த நேரத்தில் இந்த விழாவை ஒருங்கிணைந்து நடத்த பெரிதும் உதவியாக இருந்த மலேசியாவின் டிவைன் மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் எம்.பாலசுப்ரமணியனுக்கும், அவருக்குத் துணையாக இருந்த சரவணன், சுப்ரா, பெஞ்சமினுக்கும், இதற்குப் பெரிதும் துணை நின்ற டத்தோ செல்வராஜ், ஷிவானி மாறன், டத்தோ சுகுமாரன், திருமதி ஷீலா சுகுமாரன் ஆகியோருக்கும் இந்த வாய்ப்பு உருவாக காரணமாக இருந்த இயக்குநர் தேவேந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவையொட்டித் தினந்தோறும் வாழ்த்துக்கள் அனுப்பிய கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்சத்திரக் கலை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கும், குஷ்பூ சுந்தர், இயக்குநர்கள் பி.வாசு, சந்தானபாரதி, திருச்செல்வம் ஆகியோருக்கும் நடிகைகள் லதா, ரோகிணி, எங்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மனோபாலா, செயற்குழு உறுப்பினர் சின்னி ஜெயந்த், முல்லை, கோதண்டம், சேத்தன், தேவதர்ஷினி, ரோபோ சங்கர், ஆர்த்தி கணேஷ், சஞ்சீவ், ராஜ்கமல், சோனியா ஆகியோருக்கும் நன்றி.

மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கான நடனங்களை அமைத்துக்கொடுத்த நடன இயக்குநர் ஸ்ரீதர், அசோக்ராஜ், மெட்டி ஒலி சாந்தி ஆகியோருக்கும் நன்றி. அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு ஊக்கப்படுத்தி வாழ்த்துச் செய்தி அனுப்பிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் நன்றி. நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த விஷ்ணு ஆர்ட்ஸ் ராஜேஷுக்கும் திருமதி பிரியா ராஜேஷுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நாங்கள் நடத்திய முதல் நிகழ்ச்சி. எனவே ஏதாவது சிறு குறைகள் இருக்கலாம் ஒரு திருமண விழா திட்டமிட்டு நடத்தப்படும் போது கூட, அதில் சிலருக்கு மனக்குறை ஒன்று வரும். இவ்விழா முதன் முதலாக எங்களால் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறு குறைகள் இருந்தன என்று சில ஊடகங்களில் எழுதியிருந்தார்கள். அதைப் பொருட்படுத்த வேண்டாம்.

எதையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து உற்சாகத்தைக் கொடுத்து பங்களிப்பு செய்த சின்னத்திரை கலைஞர்களுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்விழா நடப்பது சங்க வளர்ச்சிக்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டு சின்னஞ்சிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் எங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் நிகழ்ச்சி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது .

நான் 1992ஆம் ஆண்டில் சன் டிவியில் செய்தி பிரிவிற்குச் சென்று அதில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் உயர்ந்து பணியாற்றினேன். அப்படிப்பட்ட என் தலைமையில் 2019ஆம் ஆண்டில் நான் தலைமை ஏற்ற பிறகு நடக்கிற நடந்த இந்தக் கலைவிழாவை சன் டிவியில் ஒளிபரப்பு அனுமதி வழங்கிய மதிப்பிற்குரிய கலாநிதி மாறன் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவிவர்மா கூறியிருக்கிறார்.

English summary
Last month, TV Serial Actors Event was held in Malaysia to raise funds for the benefit of the members of the Actors' Association. Following the announcement, TV Actor’s Association Leader Actor Ravivarma thanked everyone who participated and participated in the event.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more