நெட்டிசன்களை கெட்ட வார்த்தையில் திட்டிய சம்யுக்தா.. டென்ஷனான பேன்ஸ்!
சென்னை : சீரியல் நடிகை சம்யுக்தா, நடிகர் விஷ்ணுகாந்த் விவகாரம் பூதாகரமாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், நடிகை சம்யுக்தா நெட்டிசன்களை மோசமான வார்த்தையால் திட்டிஉள்ளார்.
விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்தவர் சம்யுக்தா. அவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து வந்தார். இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் மார்ச் மாதம்நடந்தது.
திருமணமான ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். சோஷியல் மீடியா பக்கம் போனாலே இவர்களின் கதையாகத்தான் இருக்கிறது.
சீரியல் நடிகை சம்யுக்தா : சொந்தபந்தங்களை அழைத்து, சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் திருமணம் தடபுடலாக நடந்தது. இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சம்யுக்தா இன்ஸ்டாகிராமிலிருந்த புகைப்படத்தை நீக்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

கண்ணீர் பேட்டி : இதையடுத்து, இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசி வந்த சம்யுக்தா, முதன்முறையாக பெற்றோருடன் இணைந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அவர் என்னை திருமணம் செய்து கொண்டதே செக்ஸிற்காகத்தான், என்னை அவர் பெண்ணாகவே பார்க்கல, ஒரு மிஷின் போலத்தான் பார்த்தார் என்று அவர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறினார்.
செக்ஸ் மாத்திரை: நடிகை சம்யுக்தாவின் தந்தையும், விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டு என் மகளை 24 மணி நேரமும் ஒத்துழைக்க சொல்லி டார்ச்சர் செய்தார் என்றும், ஆபாச வீடியோவை காட்டி என் மகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.
விஷ்ணுகாந்த் விளக்கம் : இதற்கு விளக்கம் கொடுத்த விஷ்ணுகாந்த், ரவி, ஹரீஸ் இவர்களை விட்டு பிரிந்து வந்த போது அவர்கள் தப்பாக நடந்து கொண்டதால் பிரிந்து வந்தேன் என்று கூறியிருந்தார். தற்போது என்னை திருமணம் செய்து கொண்டதால் என் மீது பாலியல் ரீதியாக புகார் கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியிருந்தார்.
டென்ஷனான பேன்ஸ் : இப்படி இருவரும் மாறி மாறி இணையத்தில் பேசிவருவதால் டென்ஷன் ஆன நெட்டிசன்ஸ் இதெல்லாம் கணவன் மனைவிக்குள் நடக்கும் அந்தரங்கமான விஷயம் இதையெல்லாம் வெளியில் சொல்லலாமா என்றும், நீலிக்கண்ணீர் வடித்து எல்லாத்தையும் சாதித்து விடலாம் என்று நினைக்காதீங்க, முதலில் இப்படி வீடியோ போடுவதை நிறுத்துங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதைப்பார்த்து டென்ஷனான சம்யுக்தா நெட்டிசன்களை கெட்டவார்த்தையால் திட்டி உள்ளார். இதனால், இணையவாசிகள் மேலும் டென்ஷனாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











