Vijay Wife: விஜய் மனைவி சங்கீதா எங்கு இருக்கிறார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சீவ்?

சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கொடுத்து பாக்ஸ் ஆபீஸில் கிங்காக இருந்தாலும் அவர் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக பார்க்கப்படுவது, விஜய் தனது குடும்பத்துடன் இல்லை, குறிப்பாக தனது மனைவி சங்கீதாவுடன் அவர் இல்லை, இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பதுதான். இந்த விமர்சனங்களுக்கு ஏற்ற வகையில் சில சம்பவங்களும் நடைபெற்றதால் விமர்சனங்கள் முற்ற தொடங்கியது.

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் போகிற போக்கில் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது விஜய் மற்றும் திருமண வாழ்க்கை குறித்தான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் உள்ளது என இணையவாசிகள் பேசி வருகிறர்கள்.

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா முதன் முதலாக கடந்த 1996 ஆம் ஆண்டு சந்திக்கிறார்கள். லண்டனுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் தொழிலதிபர் சொர்ணலிங்கத்தின் மகள் சங்கீதா. விஜய்யை ஒரு ரசிகையாக சந்தித்த அவருக்கு, அதன் பின்னர், அவர் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்ததால், 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படவியலை முறையாக படித்தவர். இப்போது நடிகர் சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார்.

த்ரிஷா காரணமா?: விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பிரிந்து வாழ்வதாகவும், அதற்கு விஜய்யின் சில நடவடிக்கைகள் தான் காரணம் என்றும் கிசுகிசுக்கள் பரவியது. நடிகர் விஜய்க்கு நடிகை த்ரிஷாவுடன் இருக்கும் நட்புதான், மனைவி சங்கீதா விஜய்யை விட்டுப் பிரிந்து செல்வதற்கான காரணம் என்று எல்லாம் கூறப்பட்டது. விஜய்யை அட்டாக் செய்ய வேண்டும் என்றாலே, விஜய்யின் மனைவி சங்கீதா அவருடன் இல்லை என்பதைத்தான் முதலில் தூக்கிக் கொண்டு வருவார்கள் சில இணையதள வாசிகள். இந்த இணையதள வாசிகளுக்கு தீனி போடும் விதமாக சில சம்பவங்களும் நடைபெற்றது.

சங்கீதா: அதாவது தவெக கொடி அறிமுக விழா, தவெக முதல் மாநில மாநாட்டில் விஜய்யின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள், ஆனால் அவரது மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது, விஜய்யும் சங்கீதாவும் பிரிந்தே விட்டார்கள் என்று பேச்சுகள் எழுந்தது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகரும் விஜய்யின் நீண்டகால நண்பருமான சஞ்சீவ், தான் அடிக்கடி விஜய் வீட்டுக்குத்தான் செல்வேன் என்றும், அங்கு விஜய்யின் மனைவிதான் சமைத்துக் கொடுப்பார் என்றும் கூறினார்.

Serial Actor Sanjiv Who Talks Vijay Wife Sangeetha Lives With Vijay Zee Tamil Show
Photo Credit:

விஜய் வீட்டில்: சஞ்சீவ் இவ்வாறு கூறியதை தனி வீடியோவாக கத்திரித்த விஜய் ரசிகர்கள், அதனை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவில் சஞ்சீவ், " நான் அடிக்கடி விஜய் வீட்டுக்குத்தான் போவேன். அங்கு விஜய்யும் இருப்பார், அவரது மனைவியும் இருப்பார். விஜய்யின் மனைவி சமைத்துக் கொடுப்பார், நாங்கள் சாப்பிடுவோம்" என்று தெரிவித்துள்ளார். இதைப் பகிரும் விஜய் ரசிகர்கள் விஜய் மனைவி விஜய்யுடன் தான் இருக்கிறார் என்பதை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X