சீதாவை இரண்டாவது திருமணம் செய்தேனா? ஏமாற்றினேனா? நடந்தது இது தான்.. நடிகர் கொடுத்த விளக்கம்!

சென்னை: நடிகை சீதா பார்த்திபனுடன் பத்து வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து சீரியல் நடிகர் சதீஷை, சீதா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு பின் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது குறித்து நடிகர் சதீஷ் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கிய புதிய பாதை படத்தில் நடிகை சீதா நடித்த போது இருவரும் காதலித்தனர். இந்த திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோரை மீறி சீதா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ஒரு மகனையும் சீதா பார்த்திபன் தம்பதி தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இதையடுத்து, இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்து ஆனபிறகு மீண்டும் தன்னுடைய தந்தை வீட்டுக்கே வந்து தன்னுடைய நடிப்பை துவங்கியிருக்கிறார்.

Seetha Parthiban

நடிகை சீதா: இதையடுத்து சின்னத்திரை பக்கம் வந்த நடிகை சீதா, 2010 ஆம் ஆண்டு நடிகர் சதீஷை தனது 43வது வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்கு பிறகும் சீதா திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்தார். எனக்கு துணை வேண்டும் என்பதற்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என்றும் சதீஷ் என் வாழ்க்கையில் வந்ததை எண்ணி சந்தோஷப்படுகிறேன் என்றும் சீதா கூறியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில ஆண்டுகளிலேயே அவரை விட்டு பிரிந்து தற்போது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

நடிகர் சதீஷ்: இந்நிலையில், துணை இயக்குநரும் சின்னத்திரை நடிகருமான நடிகர் சதீஷ் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் சீதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன், பார்த்திபனிடம் இருந்து அவரை பிரித்தேன், என்றெல்லாம் செய்தி வந்தது. உண்மையில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அதுதான் உண்மை. ஒன்றாக வாழ்ந்தோம், விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் என்று சொல்வது எல்லாம் சோஷியல் மீடியாவும், பத்திரிக்கையும் கிளப்பி விட்ட செய்தி, அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. இது சினிமா வட்டாரத்திலும், சின்னத்திரையிலும் எங்களுடன் நடித்த நடிகர்கள், வேலை பார்த்த அனைவருக்கும் தெரியும்.

Seetha Parthiban

நான் காரணம் அல்ல: அதுமட்டுமில்லாமல், நான் சீதாவுடன் சீரியலில் நடிக்கும் போதே பார்த்திபனுக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பிறகு தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அதே போல, என் மனைவி சீதாவால்தான் பிரிந்து சென்றார் என்றெல்லாம் செய்தி வந்தது. அதுவும் உண்மை இல்லை, அதற்கு முன்பே என் மனைவி இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். என்னைவிட என் மனைவி அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் நான் அவரை தொல்லை செய்யவில்லை.

அதே நட்பு: அதே போல, சீதாவை ஏமாற்றிவிட்டேன், அவரை பொருளாதார ரீதியாக ஏமாற்றிவிட்டேன் என்று செய்தியும் வந்தது. இந்த உலகம் ஆதாரமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேசும், செய்தியை பரபரப்பாக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஆதரமற்ற செய்திகளை எழுதுகிறார்கள். இப்போதும் நானும் சீதாவும் நல்ல நண்பர்கள் தான், என் வீட்டில் எதாவது விஷேஷம் என்றால் அவர் வருவார். இப்போதும், அதே நட்புடன் தான் நாங்கள் இருக்கிறோம் என்று சதீஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X