சஞ்சீவ் தன்னை விஜய்னு நெனச்சுக்கறான்.. சொன்னாலும் திருந்த மாட்டிங்கறான்.. ஸ்ரீகுமார் வேதனை!

சென்னை: சின்னதிரை நடிகர்களில் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரீட்சயமான பல நடிகர்கள் இப்போதும், சின்னத்திரையில் கொடிகட்டிப் பறந்து வருகின்றார்கள். அதிலும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சின்னத்திரை தொடர்களாக இருந்த ஆனந்தம், மெட்டி ஒலி, கோலங்கள், சித்தி, சின்ன பாப்பா, பெரிய பாப்பா, மை டியர் பூதம், கங்கா யமுனா சரஸ்வதி போன்ற தொடர்களை இப்போதும் 90ஸ் கிட்ஸ்கள் அவ்வப்போது தங்களது குழந்தைப் பருவத்தோடு சேர்த்த நினைவுகளை பல இடங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சின்னத்திரை நடிகர்களாக இருந்த பலரும் இப்போதும் சின்னத்திரையில் நடித்து வருகின்றார்கள். சின்னத்திரை ஜாம்பவான்களாக வளர்ந்து நிற்கும் இவர்களின் நடிப்பு குறித்து, இன்றைய கால கட்டத்தில் பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றது. இணையம் வளர்ந்த பின்னர், யார் யாரை இணையத்தில் அட்டாக் செய்கின்றார்கள், அதற்கு யாரெல்லாம் ஆதரவு தருகின்றார்கள், யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என இப்போதுவரை தெரியாமல் உள்ளது. அப்படி இணைய தளத்தில் ட்ரோல் செய்யப்பட்ட சீரியல் நடிகர் என்றால் அது, நடிகர் சஞ்சீவ் தான்.

thirumathi selvam sanjeev venkat shree kumar vijay

சஞ்சீவ்: திரைப்பட நடிகர் விஜய்யின் மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான சஞ்சீவ், பல படங்களில் விஜய்யின் நண்பராக நடித்துள்ளார். சில படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால், வெள்ளித்திரையில் அவர் எதிர்பார்த்த, வரவேற்பு இல்லாததால், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் தலையைக் காட்டி வருகின்றார். மற்றபடி, சின்னத்திரையில் இவர் இப்போதும் உள்ளார். விஜய்யின் நண்பர், என்பதாலோ என்னவோ, சீரியல்களில் நடிகர் விஜய், சினிமாவில் நடித்த காட்சிகளை, அப்படியே நடித்து வந்தார்.

thirumathi selvam sanjeev venkat shree kumar vijay

ட்ரோல்: இதனை கவனித்த இணையவாசிகள் இவரை பயங்கரமாக ட்ரோல் செய்தார்கள். சினிமா பாடல்களை சீரியலில் பயன்படுத்தினாலே, உச்சு கொட்டும் ரசிகர்கள் இன்றைக்கு அதிகம், அப்படி இருக்கும்போது, சினிமாவில் இடம் பெற்ற காட்சிகளை, அதுவும் மாஸ் ஹீரோ நடித்த காட்சிகளை அப்படியே காப்பி அடித்தால், ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? இதனால் சஞ்சீவை இணையவாசிகள் வருத்தெடுக்கத் தொடங்கினர்.

thirumathi selvam sanjeev venkat shree kumar vijay

விஜய்: இப்படியான நிலையில், இதனைப் புரிந்து கொண்ட சின்னத்திரை நடிகரும், சஞ்சீவின் நண்பருமான ஸ்ரீ குமார், இது தொடர்பாக பேசியுள்ளார். அதாவது, " தம்பி, அவரே (விஜய்) அரசியலுக்கு போய்ட்டாரு. அவர் மாதிரி பண்றத நீ தயவு செஞ்சு விட்டுடுனு பலமுறை சொல்லீட்டேன். இதே சஞ்சீவ் திருமதி செல்வம் சீரியலில் அலட்டிக்காம நடிச்சான்.

thirumathi selvam sanjeev venkat shree kumar vijay

ஆனால், இப்போது சஞ்சீவைச் சுற்றி இருப்பவர்கள், சஞ்சீவ் விஜய் மாதிரி செய்தால் சூப்பர் சூப்பர் என உசுப்பேத்தி விட்டுறாங்க. நானும் பலமுறை டேய், நீ சரியா பண்லனு சொல்றவங்களக் கூட நம்பு, இப்படி சூப்பர் சூப்பர்னு சொல்றவங்கள நம்பாதேனு சொல்லீட்டேன். ஆனால், அவன் கேட்க மாட்டிங்கறான்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்திருந்தாலும், இவர் கூறுவது சரிதான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X