எப்போதும் மாறாத விஜய்..என் கல்யாண ரிஷப்ஷனுக்கு எனக்கு முன்னால் வந்தவர்..நடிகர் ஸ்ரீகுமார் சுவாரஸ்யம்

சென்னை : நடிகர் விஜய் எளிமையான தன்னுடைய அணுகுமுறை காரணமாகவே அனைவராலும் விரும்பப்படுபவர்.

தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் தற்போதும் உள்ளார்.

அவரது வெற்றிக்கான பயணம் சாதாரணமானது அல்ல. கரடுமுரடானது. ஆனாலும் வெற்றிக் கிடைத்தாலும் தலைக்கனத்தை அவர் சுமப்பதில்லை என்ற விமர்சனங்களையே அவர் எதிர்கொண்டு வருகிறார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தன்னுடைய எளிமையான அணுகுமுறையால் ரசிகர்களை ஏராளமாக ஈர்த்து வருகிறார். மிகப்பெரிய ஸ்டாராக மாறியுள்ளார் விஜய். சர்வதேச அளவில் அவரது புகழ் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் எந்த லிஸ்ட்டானாலும் அதில் முதன்மையாக காணப்படுகிறார் விஜய்.

தன்னை செதுக்கிக் கொண்ட விஜய்

தன்னை செதுக்கிக் கொண்ட விஜய்

நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமான விஜய், அந்தப் படத்திற்காக மோசமான விமர்சனங்களையே பெற்றார். இந்தப் படமும் அந்த அளவிற்கு யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் தொடர்ந்து தன்னை செதுக்கிக் கொண்டார் விஜய். அவருடைய அப்பாவின் முயற்சியில்தான் விஜய் ஹீரோவானார் என்றாலும் அதை தக்கவைத்துக் கொள்வது எளிதானதல்ல.

ரசிகர்கள் கொண்டாடும் விஜய்

ரசிகர்கள் கொண்டாடும் விஜய்

தன்னுடைய அப்பாவின் முயற்சியால் எளிதாக திரையுலகில் நுழைந்த பலர் தற்போது காணாமல் போயுள்ளனர். ஆனால் தன்னுடைய சிறப்பான முயற்சியால் கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து தற்போது வெற்றியை சுவைத்து வருகிறார் விஜய். இவரது ரசிகர்கள் இவரைக் கொண்டாடுவதற்கு இவரது படங்கள் மட்டுமே காரணம் இல்லை. இவரது பண்பும்தான் காரணம்.

மாறாத விஜய் குணம்

மாறாத விஜய் குணம்

இதனிடையே விஜய்யுடன் பள்ளி காலத்திலிருந்தே நட்புடன் இருந்துவரும் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் விஜய் குறித்த பகிர்வுகளை தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். கடந்த 91ல் அவரை சஞ்சீவ்தான் தன்னிடம் அறிமுகம் செய்ததாகவும் அப்போது எப்படி இருந்தாரோ அதேபோல தற்போதுவரை விஜய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகமாக பேசாத விஜய்

அதிகமாக பேசாத விஜய்

விஜய் எப்போதுமே அதிகமாக பேச மாட்டார் என்றும் தாங்கள் அவ்வப்போது சாப்பிடுவதற்காக வெளியில் போவோம் என்றும் தங்களின் நட்பு தொடர்வதாகவும் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து இவர் அட்லியின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

Vijay| விஜய் முன்ன மாதிரி கிடையாது.. அனைவரையும் எச்சரித்த SAC | *Rewind Raja
ரிசப்ஷனுக்கு வந்த விஜய்

ரிசப்ஷனுக்கு வந்த விஜய்

இதனிடையே தன்னுடைய திருமணத்திற்கு தான் விஜய்க்கு பத்திரிகை வைத்ததாகவும், ஆனால் அவர் பிசியாக இருந்ததால் வரமாட்டார் என்று தான் கருதியதாகவும் கூறியுள்ள ஸ்ரீகுமார், விஜய் தன்னுடைய திருமண ரிசப்ஷனுக்கு தனக்கு முன்பே மண்டபத்திற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X