பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பால் திடீர் மரணம்.. பிரபலங்கள் அதிர்ச்சி!
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52,
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் வெங்கடேஷ்.
அதைத்தொடர்ந்து பாரதி கண்ணம்மா, ஈரமானரோஜாவே சீரியல்களிலும் நடித்துள்ள வெங்கடேஷ், சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு தொடரிலும் நடித்திருந்தார்.

திடீர் மாரடைப்பு
பெரும்பாலான சீரியல்களில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வெங்கடேஷ். இவர் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

மனைவி 2 பிள்ளைகள்
இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மறைந்த நடிகருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.

நெப்போலியனுக்கு உறவு
மேலும் நடிகர் வெங்கடேஷ், நடிகரும் அரசியல் பிரமுகருமான நெப்போலியனின் நெருங்கிய உறவினரும் ஆவார். வெங்கடேஷின் மறைவு திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி இரங்கல்
அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி சார்பாகவும் உயிரிழந்த வெங்கடேஷூக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து மரணம்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் நேற்று உயிரிழந்த செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











