எங்களுக்குள் எதுவும் இல்லை.. பிரபல நடிகையின் விவாகரத்து குறித்து மனம் திறந்த சீரியல் நடிகர்!

சென்னை: நடிகை மேக்னா வின்சென்ட் விவாகரத்து குறித்து பொன்மகள் வந்தாள் சீரியல் நடிகர் விக்கி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Recommended Video

Meghna Vincent Ex-Husband Second Marriage | Don Tony • PonMagal Vandhal, Deivam Thandha Veedu

மலையாள சின்னத்திரை நடிகையான மேக்ன் வின்சென்ட், தமிழில் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு, அவளும் நானும் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

சீரியல்கள் மட்டுமின்றி கயல் படத்திலும் நடித்துள்ளார் மேக்னா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டான் டோனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனியாக வசித்தனர்

தனியாக வசித்தனர்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேவலாயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் திரைத்துரையை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். ஆனால் திருமணம் முடித்த சில மாதங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

நடிகர் காரணம்?

நடிகர் காரணம்?

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். நடிகை மேக்னா வின்சென்ட் பொன்மகள் வந்தாள் சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் விக்கியுடன் ஏற்பட்ட காதலே அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததற்கு காரணம் என கூறப்பட்டது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

ஆனால் விவாகரத்து முடிந்த ஒரு மாதம் ஆவதற்குள் மேக்னாவின் கணவரான டான் டோனி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது நீண்ட நாள் காதலியான கிளாராவை திருமணம் செய்து கொண்டார். லாக்டவுன் என்பதால் எளிய முறையில் திருமணம் செய்ததாக கூறினார்.

நண்பர்கள் தான்

நண்பர்கள் தான்

இந்நிலையில் நடிகை மேக்னா வின்சென்ட்டுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட சீரியல் நடிகர் விக்கி, தங்களுக்குள் உள்ள உறவு குறித்து பேசியுள்ளார். அதாவது, நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

மகன் உள்ளான்

மகன் உள்ளான்

மேலும் அனைத்து குடும்பங்களை போல தங்களின் குடும்பத்திலும் பிரச்சனை உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான் என்றும் அவனின் எதிர்காலமும் வாழ்கையும் முக்கியம் என்றும் கூறியுள்ளார் விக்கி. மேலும் எங்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X