ரவி உன்னை மறக்க முடியல.. சம்யுக்தா ஆடிய காதல் நாடகம்.. ஆதாரத்தை வெளியிட்ட விஷ்ணுகாந்த்!

சென்னை : நடிகை சம்யுக்தா ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்து வந்ததற்கான ஆதாரத்தை விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்த சம்யுக்தா, ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

serial actor Vishnu Kanth released chating and audio evidence on Samyukta

இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து ஒரு மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் தற்போது பிரிந்துவிட்டனர்.

24 மணி நேரமும் அதே நினைப்பு :

இருவரும் பிரிந்தது மட்டுமில்லாமல் இருவரும் மாறி மாறி சண்டைப்போட்டு வருகின்றனர். விவாகரத்து முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, 24 மணி நேரமும் அவருக்கு அது வேண்டும். எனக்கு 22 வயசுதான்ஆகுது, அவருக்கு 32 வயசு ஆகுது, அவருக்கு எப்போதும் அதே நினைப்புதான் என கண்கலங்கி பேசி இருந்தார்.

பல ஆதாரங்கள் :

இதை மறுப்பு தெரிவித்த விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், சம்யுக்தா தன்னை காதலிக்கும் முன்பே, ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும், இவர்கள் இருவரும் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் ஒன்றாக சேர்த்து நடித்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

கதறி அழுத சம்யுக்தா :

மேலும், நிகழ்ச்சி கலந்து கொண்ட சம்யுக்தா, ரவி என்னை விட்டு போகாதே என்று கண்ணீர் விட்டு அழுது இருந்தார். ஆனால், நாங்கள் இருவரும் வேறும் நண்பர்கள் தான் என கூறியிருந்தார். ஆனால், சம்யுக்தா, தன்னை காதலிக்கும் போதே ரவியுடனும் சாட்டிங் செய்து இருக்கிறார் என்றும், இது குறித்து சமித்தாவிற்கும் ரவிக்கும் பொதுவான நபர் ஒருவர் சம்யுக்தாவிடம் கேட்கும் ஆடியோ ஆதாரம் ஒன்றை விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ளார்.

serial actor Vishnu Kanth released chating and audio evidence on Samyukta

மறக்க முடியவில்லை :

அந்த ஆடியோவில் விஷ்ணுகாந்த் ஏற்கனவே ஒருவரை காதலித்தார் என்று என்னிடம் சொல்லிவிட்டார் ஆனால் நான் ரவி வெறும் நண்பர் என்று தான் சொல்லி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சம்யுக்தா. மேலும், விஷ்ணுகாந்துடன் நிச்சம் முடிந்த பின்னர் கூட ரவியிடம் உன்னை என்னால் மறக்க முடியவில்லை, நாம் ஒன்று சேர வேண்டும் என்றெல்லாம் சாட் செய்து இருக்கிறார் சம்யுக்தா. இது இப்போது பெரும் புயலை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X