செக்ஸ் டார்ச்சர் கொடுத்தேனா? குடும்பமே பொய் சொல்லுது.. சம்யுக்தாவை விளாசிய விஷ்ணுகாந்த்!
சென்னை : செக்ஸ் டார்ச்சர் கொடுத்தேன் என்று குடும்பமே சேர்ந்து பொய் சொல்லுது என சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிற்கு சரியான பதில் அடி கொடுத்துள்ளார்.
சிரியல் நடிகர் விஷ்ணுகாந்த்தும், சம்யுக்தாவும் திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டனர்.

இவர்கள் பிரிந்தது மட்டுமில்லாமல் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறிவருகின்றனர்.
நான் என்ன மிஷினா : இன்ஸ்டாகிராம் நேரலையில் மட்டும் பேசி வந்த சம்யுக்தா, முதன்முறையா பெற்றோருடன் இணைந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அவர் என்னை திருமணம் செய்து கொண்டேதே செக்ஸிற்காகத்தான், என்னை அவர் பெண்ணாகவே பார்க்கல, ஒரு மிஷின் போலத்தான் பார்த்தார் என் பொம்மை மாதிரிதான் பார்த்தார். தினமும் ஆபாச வீடியோவை காட்டுவார். அதில் செய்வது போல செய்ய சொல்லுவார் என்றும் அடுக்கடுக்கான புகாரை கூறியிருந்தார்.
செக்ஸ் மாத்திரை : இதையடுத்து பேசிய நடிகை சம்யுக்தாவின் தந்தை, விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டு என் மகளை 24 மணி நேரமும் ஒத்துழைக்க சொல்லி டார்ச்சர் செய்தார் என்றும், ஆபாச வீடியோவை காட்டி என் மகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி என்றும் விஷ்ணுவிஷால் மீது படுமோசமான புகாரை கூறியிருந்தார்.
அமைதியாக இருக்க முடியாது : இதற்கு விளக்கம் கொடுத்த, விஷ்ணுவிஷால், இது குடும்ப பிரச்சனை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று தான் நான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். இனியும் அமைதியாக இருக்க முடியாது. இதற்கும் மேலையும் நான் எதுவும் பேசாமல் இருந்தால், தவறு என் மீது என்று அனைவரும் நினைத்துவிடுவார்கள்.
செக்ஸ் டார்ச்சர் கொடுத்தேனா : சம்யுக்தா குடும்பத்தோடு கொடுத்த பேட்டியை நான் பார்த்தேன் அதில் நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ரவி, ஹரீஸ் இவர்களை விட்டு பிரிந்து வந்த போது அவர்கள் தப்பாக நடந்து கொண்டதால் பிரிந்து வந்தேன் என்று கூறியிருந்தார். தற்போது என்னை திருமணம் செய்து கொண்டதால் என் மீது பாலியல் ரீதியாக புகார் கூறுகிறார்.
காதலிக்கும் போது தெரியலையா : எட்டு மாதம் நானும் சம்யுக்தாவும் காதலித்து இருக்கிறோம், அப்போது என்னை பற்றி தெரியவில்லையா, என் வீட்டிற்கு வந்து இருக்கிறார். இருவரும் சேர்ந்து இன்ஸ்டாவில் பல ரிலீஸ்களை வெளியிட்டு இருக்கிறோம் அப்போது எல்லாம் நான் மோசமானவன் என்று தெரியவில்லையா. திருமணம் ஆன 15 நாளிலேயே அவர் என் மீது போலீசில் புகார் கூறியது ஏன் சம்யுக்தா பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை விஷ்ணுகாந்த் கூறினார்.


Click it and Unblock the Notifications











