டேட்டிங் போனது உண்மைதான்.. காதலில் விழுந்த சீரியல் ஜோடி.. இன்ஸ்டாவில் வேற லெவல் ரொமான்ஸ்!
சென்னை: பிரபல டிவி சீரியல் ஜோடி காதலில் விழுந்துள்ள தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா மற்றும் சின்னத்திரையில் இருப்பவர்கள் காதலில் விழுவதும் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் புதிதல்ல.
3 வயதில் ஜெசிக்காவுக்கு இப்படி ஒரு நோய்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்
ஒரே சீரியலில் நடிக்கும் பிரபலங்கள், ஒரே சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் என பல ஜோடிகள் இதுவரை காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

காதலில் விழுந்த சீரியல் பிரபலங்கள்
அந்த வகையில் தற்போது இரண்டு பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் காதலில் விழுந்துள்ளனர். அதாவது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லத்தரசிகளின் அனுபவங்களை காட்டி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவி உள்ளது.

பாக்கியலட்சுமியின் மகன் நடிகர் ஆர்யன்
இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். பாக்கியலட்சுமியின் மூத்த மகனாக செழியன் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் ஆர்யன். இதேபோல் மற்றொரு பிரபல பொழுதுபோக்கு டிவி சேனலான ஜீ தமிழில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபனா
சுமார் 1125 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த செம்பருத்தி சீரியலில் நடிகை ப்ரியா ராமன், ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர்.

டேட்டிங் போன ஆர்யன் ஷபனா
இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆர்யன் என்கிற வேலு லட்சுமணன் ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்ற தகவல் சோஷியல் மீடியாக்களில் பரவியது.

ஆர்யனிடம் ரசிகை கேட்ட கேள்வி
டேட்டிங் செய்வதாக பரவிய தகவலை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில் நடிகர் ஆர்யன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகை ஆர்யனிடம், நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டார். அதற்கு ஆர்யன் கூறிய பதில் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஷபனாவுக்கு என்ன சொல்லட்டும் ?
அதாவது, அந்த ரசிகைக்கு பதில் கூறிய ஆர்யன், நடிகை ஷபானாவை டேக் செய்து இவங்களுக்கு என்ன சொல்லட்டும்? என்று ரசிகையிடமே பதில் கேள்வி எழுப்பினார். ஆர்யனின் இந்த பதிவை தனது இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்த நடிகை ஷபானா, "மைன்" அதாவது என்னுடையவர் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் உறுதியானது.

ஆர்யனின் கை மீது பெண் ஒருவரின் கை
இருந்த போதும் இருவரும் வெளிப்படையாக காதலிப்பதாக கூறவில்லை. இந்நிலையில் நடிகர் ஆர்யன் சமீபத்தில் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோ மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டா பதிவில், பெண் ஒருவரின் கை ஆர்யனின் கை மீது இருப்பது போல போட்டோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. இரு கைகளில் இருக்கும் மோதிரம் ரசிகர்களின் கவனத்தை ஈரத்துள்ளது.

அவளுடைய மனதுடன் காதலில் விழுந்தேன்
ஒருவேளை இந்த போட்டோ மூலம் தனக்கும், ஷபானாவிற்கு இடையே நிச்சயதார்த்தம் நடந்து விட்டதை சிம்பாலிக்காக ஆர்யன் கூறி உள்ளாரா என்ற யோசித்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும் அந்த போட்டோவுக்கு "அவளுடைய மனதுடன் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒரு நாள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி குறையும்.

வெளிப்புற அழகு மங்கி விடும்
மேலும் ஒரு நாள் வெளிப்புற அழகு மங்கி விடும். ஆனால் மனசு என்பது வயது இல்லாதது. நித்தியமானது, அது தான் அன்பு வாழும் இடம்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்யனின் பதிவுக்கு பதில் கொடுத்துள்ள நடிகை ஷபானா, "நீங்கள் என்னை வியக்க வைக்க எப்போதும் தவற மாட்டீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்
அவர்களின் இந்த ரொமான்டிக் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் இருவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர். ஆர்யன் - ஷபானா காதல் விஷயம் தான் தற்போது தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.


Click it and Unblock the Notifications











