சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு கோலாகலமாக நடந்த திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அக்ஷிதா போபையா. இவருக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அந்த போட்டோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னர்

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அக்ஷிதா போபையா, மைசூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். படித்துக்கொண்டு இருக்கும் போதே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது அவருக்கு கன்னட சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

marriage

நடிகை அக்ஷிதா போபையா: இதைத்தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் நந்தினி, கண்ணான கண்ணே போன்ற தொடர்களில் நடித்து வந்த இவர், விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா என்ற வில்லி ரோலில் நடித்தார். அந்த சீரியலில் தமிழை ஒருதலையாக காதலிக்கும் இவர், தமிழ் சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டதால், அவர்களின் திருமண வாழ்க்கையை கெடுக்க பலவகையில் சூழ்ச்சி செய்தார். அந்த சீரியலில் அக்ஷிதா போபையாவிற்கு நல்ல அடையாளத்தையும் பெயரையும் பெற்றுத்தந்தது. விஜய் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த சீரியல் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.

காதல் திருமணம்: இந்நிலையில், இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த நடிகை அக்ஷிதாவிற்கு நேற்று திருமணம் கோலாகலமாக நடந்துமுடிந்துள்ளது. பாரம்பரிய கொடவா முறைப்படி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. அக்ஷிதாவின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும், மாப்பிள்ளையின் சொந்த ஊரான மடிகேரியில் உள்ள கோனிகொப்பாவில் திருமணம் நடைபெற்றதால், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

marriage

மாப்பிள்ளை யார்: சீரியல் நடிகை அன்ஷிதாவின் கணவர் பிரீத்தம் சுரேஷ் சீரியல் தயாரிப்பாளராக உள்ளார். அக்ஷிதா தமிழ் சீரியலில் பணிபுரியும் போது ப்ரீத்தத்தை சந்தித்துள்ளார். அதைத்தொடர்ந்து இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது, சில ஆண்டுகள் இருவரும் காதலர்களாக வலம் வந்தனர். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X