நடிகர்களை மட்டும் விமர்சிப்பது ஏன்.. பயில்வான் ரங்கநாதனை விளாசிய ஆல்யா மானசா !
சென்னை : சின்னத்திரை நடிகை ஆலியா மானசா, பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலில் காதலர்களாக நடித்து நிஜ காதலர்களாக மாறி விட்டனர்.
சீரியலில் காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல ஆனால் இவர்கள் திருமணம் முடிந்தாலும் என்றும் காதலர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்

ஆலியா மானசா
இந்த நட்சத்திர ஜோடிக்கு ஐலா என்ற மகள் உள்ளார். இதையடுத்து அவருக்கு கடந்த மார்ச் மாதம் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் சூட்டியுள்ளார்கள். ராஜா ராணி சீரியல் 2 வில் நடித்து வந்த ஆல்யா, 2ஆவது குழந்தை பிறந்ததை அடுத்து அந்த சீரியலிலிருந்து விலகினார். இரண்டுமாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஆக்வாக மாறி உள்ளார்.

வேதனை அடைகிறது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குத்து விளக்கை ஏற்றி வைத்து பேசிய ஆலியா மானசா. அதில், நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசுவதை கேட்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. இது போன்ற சம்பவங்களால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு
இருந்தாலும், இந்த மாதிரியான வீடியோக்களை நான் பார்க்கும் போது மனவேதனை அடைகிறன். அதில் பேசு பொருளாக இருக்கும் நடிகர்களுக்காக வருந்துகிறேன். எல்லோருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. சரி தவறு என்பதைத் தாண்டி அவர்களுடைய விருப்பப்படி வாழ்வது அவர்களது உரிமை; அதில் நாம் தலையிட முடியாது.

நாங்களும் மனிதர்கள் தான்
சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலுமே இதுபோன்ற தனிப்பட்ட உறவுகள் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, நடிகர்களது விஷயத்தை மட்டும் ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தி பொது வெளியில் பேச வேண்டும்? நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு பேசுவது வருத்தமளிப்பதாக ஆலியா மானசா அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











