காதலித்து ஏமாற்றிய பிரபல சீரியல் நடிகை.. கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன்.. காதலன் புகார்!

சென்னை: நடிகை ரிஹானா முதல் கணவர் இருப்பதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தொழிலதிபரான ராஜ் கண்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். அந்த பஞ்சாயத்தே இன்னும் ஒயாத நிலையில், சீரியல் நடிகை ஒருவர் காதலித்து பண மோசடி செய்துவிட்டதாக ஐடி ஊழியர் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் நடிகை மீது புகார் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த கௌரிவாக்கத்தை சேர்ந்த ஹரீஷ் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குங்ஃபூ பயிற்சிக்கு சென்ற போது சின்னத்திரை நடிகையான அனாமிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்ததாக கூறியுள்ளார். தொடக்கத்தில் அனாமிகா தனக்கு கடன் பிரச்சனை இருப்பதாகவும், அதை சரி செய்தால்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் எனக் கூறியதை நம்பி கேட்கும்போதெல்லாம் அனாமிகாவிற்கு பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

serial actress Anamika complaint
Photo Credit:

காதலன் புகார்: அனாமிகா தொடர்ந்து என்னிடம் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார், ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமாக பணம் கேட்டதால், அந்த பணத்தை என்னால் கொடுக்க முடியாததால், என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். என்ன காரணம் ஏன் பேசுவதில்லை என்று கேட்டபோது, எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதனால் நாம் இருவரும் சேர்ந்து பயணிக்க முடியாது, இந்த உறவு திருமணத்தில் முடியாது என பல விஷயங்களை கூறியதால், இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்து விட்டோம். ஒரு வருடத்திற்கு பிறகு, எனக்கு பணத் தேவை இருந்ததால், பணத்தை கேட்டபோது, பணத்தை கேட்டு தொல்லை செய்தால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினார். இருந்த போதும் நான் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்ததால், என் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பொய்யான புகார்: அதில், நான் அவரை டார்ச்சர் செய்ததாகவும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் பொய்யான புகார் ஒன்றை கொடுத்து இருக்கிறார். நான் அனாமிகாவிற்கு பணம் கொடுத்தது, அவர் என்னை காதலித்த போது அனுப்பிய அனைத்து மெசேஜும் வாட்ஸ் அப்பில் உள்ளது. அவர் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரவேண்டும், மேலும், என்னை போல இன்னும் எத்தனை பேரை அவர் நம்ப வைத்து ஏமாற்றி பணத்தை பறித்து இருக்கிறார் என்பது குறித்து அனாமிகாவிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் ஐடி ஊழியரான ஹரீஷ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X