பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நுழைந்த அடுத்த பிரபலம்.. மறக்க முடியுமா மெட்டிஒலி சாந்தி அரவிந்த்!

சென்னை : சினிமாவில் பிரபல டான்சராக இருந்து மெட்டி ஒலி தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தி அரவிந்த்.

இவர் இந்த சீரியலைத் தொடர்ந்து சின்னத்திரையில் சிரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரும் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அடாவடி கேரக்டர்கள் மூலம் பிரபலமான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக ரசிகர்களை அதிகமாக கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6வது சீசனில் நுழைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் 5 சீசன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது 6வது சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

தாமதமான நிகழ்ச்சி

தாமதமான நிகழ்ச்சி

முன்னதாகவே இந்த நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் சற்று தாமதமாகவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆண், பெண், திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கலைநிகழ்ச்சிகளுடன் துவக்கம்

கலைநிகழ்ச்சிகளுடன் துவக்கம்

சிறப்பான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மாலை துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை முந்தைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். கடந்த சில தினங்களாக அடுத்தடுத்த ப்ரமோக்களால் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் கமல்ஹாசன்.

வேட்டைக்கு ரெடியா?

வேட்டைக்கு ரெடியா?

வேட்டைக்கு ரெடியா என்று கமல்ஹாசன் தொடர்ந்து ரசிகர்களிடம் ப்ரமோக்கள் மூலம் கேள்வி எழுப்பி வந்தார். இந்த ப்ரமோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏற்கனவே அவர்களின் விருப்பத்திற்குரிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை வெகுவாக எதிர்பார்க்க வைத்துள்ளது.

சீரியல் நடிகை சாந்தி அரவிந்த்

சீரியல் நடிகை சாந்தி அரவிந்த்

இந்த நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், சீரியல் நடிகைகளாக மகேஸ்வரி, ரச்சிதாவுடன் இணைந்து சாந்தி அரவிந்தும் களமிறங்கியுள்ளார். பிரபல டான்சரான அவர், மெட்டி ஒலியின் அம்மி அம்மி அம்மி மிதித்து பாடல் மூலம் பிரபலமானவர். இதன்மூலம் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

போல்டான கேரக்டர்கள்

போல்டான கேரக்டர்கள்

இந்நிலையில் இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார். சீரியல்களில் தன்னுடைய போல்டான கேரக்டர்கள்மூலம் கவனம் பெற்றுவந்த இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியி இணைந்துள்ள நிலையில், அங்கு அதிரடியாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X