ஆடிஷனில் டிரஸ்சை மேலே இழுக்க சொன்னார்..அசிங்கமாக நடந்து கொண்ட டாப் இயக்குநர்.. நடிகை கதறல்!

சென்னை: ஆடிஷனுக்கு சென்ற போது, டிரஸ்சை மேலே தூக்கச் சொல்லி அசிங்கமாக நடந்து கொண்டார் என்று சீரியல் நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அழகான க்யூட்டான நடிகையான அர்ச்சனா மாரியப்பன் சீரியல், சினிமா என இரண்டு தளங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

Serial actress Archana Mariyappan spoke openly about the adjustment

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இழுத்து போர்த்திக்கொண்டு நடித்து வரும் இவர், இணையத்தில் அனல் பறக்கும் அளவிற்கு செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அர்ச்சனா மாரியப்பன்: கொழுக்கு மொழுக்கு நடிகையான அர்ச்சனா மாரியப்பன் நடிகர் சிம்புவின் வாலு திரைப்படத்தில் கவுன்சலரின் மனைவியாக எனக்கு சந்தோஷம் குடுக்க தெரியும்.. உள்ள வாங்க.. என்று உதட்டை சுழித்து ஒட்டு மொத்த இளசுகளின் கவனத்தையும் சட்டென தன் பக்கம் இழுத்தார். நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

குடும்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்: சீரியல் மற்றும் சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் இவர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் சினிமாவிற்கு வருவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, ஏன் என்றால், நான் ரொம்ப கூச்சப்படுவேன், ஆனால் குடும்ப சூழ்நிலையால் தான் சினிமாவில் நடிக்க வந்தேன்.

Serial actress Archana Mariyappan spoke openly about the adjustment

ஆடிஷனுக்கு சென்ற போது: இதையடுத்து, அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அர்ச்சனா, ஆடிஷனுக்கு வருமாறு ஒரு பெரிய இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தது. நர்ஸ் வேடத்தில் நடிக்க வேண்டும், உங்களுக்கு ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கும் என்றார்கள். நானும் அதற்கு சரி என சொன்னேன்.

அசிங்கமாக நடந்து கொண்டார்: அப்போது இயக்குனர் என்னிடம், உன்னுடைய பேண்ட்டை முழங்கால் வரை தூக்கு என சொன்னார். எதுக்கு என்று கேட்டதற்கு, நர்ஸ் வேடத்தில் நீங்கள் எப்படி இருப்பீங்க என்பதை பார்க்க தான் என சொன்னதால், நானும், முழங்கால் வரை தூக்கினேன். பின்னர் இன்னும் கொஞ்சம் மேலே தூக்க சொன்னார். அப்போது தான் எனக்கு புரிந்தது. அவர் தப்பான எண்ணத்தில் இருக்கிறார் என்று . நாளை காஸ்டியூம் போட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். அவரை எதுவும் சொல்ல முடியாது ஏன் என்றால் அவர் பெரிய இயக்குநர்.

கஷ்டமாக இருக்கும்: அதே போல இணையத்தில் ஆக்டிவாக இருப்பேன், எப்போதும் புகைப்படத்தை பதிவிடுவேன். அந்த போட்டோவைப் பார்த்து படுமோசமாக கமெண்ட்டுகள் வரும். பர்சனல் எண்ணில் கூட சிலர் ஆபாசமாக மெசேஜ் செய்வார்கள். அது மனதிற்கு கஷ்டமாக இருக்கும், எனக்கு பிடித்து இருப்பதால் செய்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X