திருமணமான நடிகரை மணந்த ஆயிஷா.. இணையத்தில் பரவும் திருமண போட்டோஸ்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற தொடரில் ரௌடி பேபியாக நடித்து பிரபலமான நடிகை ஆயிஷா மற்றும் கிருஷ்ணாவின் திருமண போட்டோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் கிருஷ்ணா ஏற்கனவே நடிகை சாயா சிங்கை திருமணம் செய்து கொண்டு வாழ்த்து வரும் நிலையில், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரபல சீரியல் நடிகரான கிருஷ்ணா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் கிடைத்தார். இந்த சீரியலை தொடர்ந்து இதய திருடன், அழகிய அசுரா, பத்து பத்து, ஈரம், ஆனந்தபுரத்து வீடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஆனந்தபுரத்துவீடு என்ற படத்தில் நடித்த போது, அதில் நடித்த சாயா சிங்குடன் நட்பு ஏற்பட்டதை அடுத்து 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

ஆயிஷா,கிருஷ்ணா: இந்நிலையில் இணையத்தில் நடிகை ஆயிஷா மற்றும் கிருஷ்ணா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. திடீரென டிரெண்டாகும் அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்றும், சாயாசிங்கின் நிலைமை என்ன ஆச்சு என்றும் ரசிகர்கள் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் நடிகை ஆயிஷா மற்றும் கிருஷ்ணா இருவரும் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் உப்பு புளி காரம் என்ற வெப்தொடரில் நடித்து வருகின்றனர்.அந்த படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட போட்டோ தான் இது என்பது தெரியவந்ததை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

வெப் தொடர்: உப்பு புளி காரம் என் வெப் தொடரை இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கி உள்ளார். இந்த தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா என பலர் நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவு மையமாக வைத்து இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத் தொடர் இளைஞர்களுக்கு மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இத்தொடரை பிரபல நிறுவனமான விகடன் தயாரித்துள்ளது. இத்தொடருக்கு இசையமைப்பாளர் ஷேக் இசையமைத்துள்ளார். மேலும், பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











