சினிமாவில் அவங்கள மாதிரி நடிக்கனும்.. எனக்கு பிடிச்ச நடிகர் அவர்தான்.. நடிகை ஆயிஷா ஓபன் டாக்!
சென்னை: சினிமாவில் சரண்யா மோகன் போன்று நடிக்க வேண்டும் என பொன்மகள் வந்தாள் சீரியல் நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.
Recommended Video
டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிப்பதும் சினிமாவில் வாய்ப்பில்லாமல் போகும் நடிகைகள் டிவி சீரியல்களில் நடிப்பதும் காலங்காலமாய் நடக்கும் ஒன்றுதான்.
சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் சினிமா வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீப காலமாய் சீரியல் நடிகைகளுக்கு சமமாக போட்டோ ஷுட் நடத்தி வருகின்றனர்.

பொன்மகள் வந்தாள் சீரியல்
லாக்டவுன் காரணமாக கடந்த சில மாதங்களாக சீரியல் படப்பிடிப்புகள் நடைபெறாத நிலையில் கடந்த சில நாட்களாய் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்தப்படியே பொன்மகள் வந்தாள் சீரியல் ஹீரோயினான ஆயிஷா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சத்யா சீரியலில் வாய்ப்பு
அதில் கேரளாவை சேர்ந்த தான் படிப்புக்காக சென்னை வந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது ரெடி, ஸ்டெடி, கோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சீரியல் ஆடிஷனுக்கு வாய்ப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆடிஷனில் சரியாக செய்ததால் சத்யா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

ஆரம்பத்தில் கஷ்டம்
அந்த சீரியலில் தனது நடிப்பை பலரும் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார் ஆயிஷா. இதனை தொடர்ந்து பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனதாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் நடிக்க சிரமமாக இருந்ததாகவும் பின்னர் செட்டில் இருந்த சீனியர் நடிகைகளிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை சரண்யா மோகன்
சினிமாவில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகை ஆயிஷா, சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்ற அவர், அப்படியே நடித்தாலும் தன்னுடைய ரோல் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்றார். அதாவது, யாரடி நீ மோகினி படத்தில் சரண்யா மோகன் கேரக்டர் போன்று என்றார்.

விஜய் சேதுபதிதான் பிடிக்கும்
அந்தப் படத்தில் சரண்யா மோகன் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கேரக்டர் எல்லோர் மனதிலும் பதிந்தது. அதுபோன்ற ரோல்களை செய்யவே விரும்புகிறேன் என்றார். மேலும் தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்றும் அவர்தான் தன்னுடைய பெரிய இன்ஸ்பைரேஷன் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











