குடிச்சி குடிச்சே செத்தாரு.. நடுதெருவில் நின்றேன்..சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி!
சென்னை: எங்க அண்ணா, இனியா, சின்ன மருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை பானுமதி, தற்போது இவர், யூடியூப் சேனல் ஒன்றுக்காக ஷகிலாவுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அதில், நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை தான், நான் சிறுவயதில், ஸ்டேஜில் நடனமாடுவேன் அப்போது, எனக்கும் டான்ஸ் மாஸ்டருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து, வீட்டில் வந்து பேசி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அப்போது எனக்கு 16 வயது தான். எனக்கு இரண்டு ஆண்குழந்தைகள் இருக்கிறார்கள். பத்து வருடம் என் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது.

நடிகை பானுமதி: அப்போது தான் என் கணவர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார். ரெண்டு குழந்தைகளோட என்ன பண்றதுனு தெரியாம நின்னேன். அந்த நேரத்தில் என் கணவரின் குடும்பமும் எனக்கு உதவி செய்யல, நான் தான் என் கணவரை கொன்றுவிட்டேன் என்று ரொம்ப பெரிய பிரச்சனை செய்தார்கள். அவரு குடிச்சி குடிச்சே செத்தாரு, அவரை காப்பாற்ற எவ்வளவு போராடினேன் என்று எனக்குத்தான் தெரியும். இதனால், இவர்களின் உறவே வேண்டாம் என்று வந்துவிட்டேன். நான் என் குழந்தைகள் அப்பா, அம்மா, என் தங்கை, என் மகன் அவ்வளவு தான். என் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக, அவர்களின் சாப்பாட்டுக்காக நான் சினிமாவில் துணை நடிகையாக 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க வந்தேன்.
ரகசியமாக வளர்த்தேன்: எனக்கு இரண்டு பசங்க இருக்காக என்று கூட நான் யார் கிட்டையும் சொன்னது இல்லை. இவ்வளவு பெரிய பசங்களா என்று கேட்பார்கள் என்று யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வளர்த்தேன். இந்த நேரத்தில் இந்த இடத்தில் எனக்கு இரண்டு பசங்க இருக்கிறார்கள் என்று சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்படியோ கஷ்டப்பட்டு என் இரண்டு மகன்களையும் படிக்க வைத்துவிட்டேன் என்றார்.
இரண்டாவது திருமணம்: இதைத்தொடர்ந்து பேசிய பானுமதி, குழந்தைகளுக்காக நான் மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அந்த வாழ்க்கையும் எனக்கு சரியாக அமையவில்லை. அதிலும், ஏமாற்றம் தான் இதனால், எதுவுமே வேண்டாம் என்று என் குடும்பத்திற்காக ஓட ஆரம்பித்தேன், எங்களுக்கு என்ற எந்த சொந்தமும் இல்லை, நண்பர்களும் இல்லை, நாங்க செத்தா தூக்கிப்போடக்கூட ஆள் இல்லை,
தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் போராட்டங்கள் இவைகளை எல்லாம் தாண்டி என் மகன்களை நான் நல்லபடியாக வளர்த்திருக்கிறேன். அவர்களை பெருமைப்பட வைக்க வேண்டும் என ஒரு மேடைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை பானுமதி கண்ணீர் மல்க பேசினார்.


Click it and Unblock the Notifications











