மகனுக்கு உதட்டிலேயே முத்தம்.. இதுகூட சைல்ட் அப்யூஸ் தான் என கிளம்பிய நெட்டிசன்கள்.. என்ன ஆச்சு?

மும்பை: பிரபல இந்தி டிவி நடிகை சவ்வி மிட்டல் தனது குழந்தையின் உதட்டில் முத்தம் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

சில நெட்டிசன்கள் இது கூட பாலியல் தொல்லை தான் என்றே நடிகையை விளாசிய நிலையில், நடிகை போட்டுள்ள ரிப்ளை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சமீப காலமாக நடிகைகள் தங்கள் குழந்தைகளுக்கே லிப் கிஸ் அடிப்பதை வழக்கமாக மாற்றி வருவது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

42 வயதாகும் பிரபல இந்தி டிவி சீரியல் நடிகை தனது குழந்தைகளுக்கு வாயிலேயே முத்தம் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், பலரும் அதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். நாகினி, வீராசாட், கிருஷ்ணதாஸி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் சவ்வி மிட்டல்.

குடும்பமும் குழந்தைகளும்

குடும்பமும் குழந்தைகளும்

மோஹித் ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை சவ்வி மிட்டலுக்கு கடந்த 2012ம் ஆண்டு அரீஸா எனும் பெண் குழந்தையும் கடந்த 2019ம் ஆண்டு அர்ஹாம் உசைன் எனும் ஆண் குழந்தையும் பிறந்தனர். குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் கொண்ட சவ்வி மிட்டல் அடிக்கடி லைக்குக்காக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

உதட்டில் முத்தம்

உதட்டில் முத்தம்

சமீபத்தில் நடிகை சவ்வி மிட்டல் தனது மகனுக்கு உதட்டிலேயே முத்தம் கொடுத்தபடி எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி ஏகப்பட்ட விளாசல் கமெண்ட்டுகளை போட்டு நடிகையை திட்டித் தீர்த்துள்ளனர். அதனை பார்த்து விட்டு அமைதியாக போகாமல், இதை வைத்தே சென்சேஷனை க்ரியேட் செய்யலாம் என நடிகை போட்ட கணக்கு கச்சிதமாக வொர்க்கவுட் ஆகி உள்ளது என்றே மீண்டும் அவரை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நிறைய லிப் கிஸ் போட்டோஸ்

நிறைய லிப் கிஸ் போட்டோஸ்

மகனுக்கு உதட்டில் லிப் கிஸ் அடித்த போட்டோ ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து மகனுக்கும் மகளுக்கும் உதட்டிலேயே முத்தம் கொடுக்கும் போட்டோக்களை வெளியிட்டு, என் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. என் குழந்தைகள் மீது அளவில்லா அன்பு வைத்திருப்பதால் தான் உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறேன் என கேப்ஷன் போட்டு திட்டித் தீர்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சவ்வி மிட்டல். அவரது இந்த செய்கைக்கு வரவேற்பும் வசைகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X