என் பொண்ணு எத்தனை மணிக்கு செத்தான்னே தெரியல.. செத்து போயிடலாம்னு தோனுது.. கதறும் சித்துவின் தாய்!

சென்னை: தனது மகள் எத்தனை மணிக்கு இறந்தார் என்றே இதுவரை தனக்கு தெரியவில்லை என சித்ராவின் தாயார் கதறியுள்ளார்.

பிரபல விஜேவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையும்ன சித்ரா கடந்த 9ஆ ம் தேதி தனது கணவருடன் ஹோட்டல் அறையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை சித்ராவை அவரது கணவர் ஹேமந்துதான் அடித்துக் கொன்றுவிட்டார் என அவரது தாய் விஜயா குற்றம்சாட்டி வருகிறார்.

நடத்தையில் சந்தேகம்

நடத்தையில் சந்தேகம்

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேமந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டது தெரியவந்தது.

பெற்றோரிடம் விசாரணை

பெற்றோரிடம் விசாரணை

இதனை தொடர்ந்து ஹேமந்தை கைது செய்துள்ள போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து ஹேமந்தின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் மரணம் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது.

திடுக்கிடும் தகவல்

திடுக்கிடும் தகவல்

இந்நிலையில் சித்ராவின் தாயரான விஜயா ஊடகம் ஒன்றுக்கு தனது மகளின் மரணம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர் சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

இன்னும் பார்க்கவில்லை

இன்னும் பார்க்கவில்லை

அதாவது, தனது மகளின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதுவரை தாங்கள் பார்க்கவில்லை என கூறினார். மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் ஆள் இல்லை என்று கூறியுள்ள விஜயா தனது மகளின் சொத்து தொடர்பாக பரவும் தகவல்களையும் மறுத்துள்ளார்.

நீண்ட நாள் ஆசை

நீண்ட நாள் ஆசை

அதாவது தனது மகள் ஆடி கார் வாங்கியது லோனில்தான் என்றும், ஏற்கனவே இருந்த பழைய காரை விற்று விட்டு புதிய காரை வாங்கினார் என்றும் கூறியுள்ளார். கடனில் இதையெல்லாம் வாங்க வேண்டாம் என்று தாங்கள் கூறிய போதும் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று வாங்கினார் என்றும் கூறியுள்ளார்.

பிணத்தின் மீது பேசுகிறார்கள்

பிணத்தின் மீது பேசுகிறார்கள்

தனது மகள் இறந்தப் பிறகு தப்பானவர் என்று கூறுகிறார்கள்.
அவர் உயிருடன் இருந்த போதே கூறியிருந்தால் அவரே பதில் சொல்லியிருப்பார். தப்பானவராக இருந்தால் ஏன் கடன் பெற வேண்டும், பணமாகவே கொடுத்திருக்கலாமே. அவள் பிணத்தின் மீது பழி சொல்கிறார்கள்.

மகளோடே போய்விடாலாம்..

மகளோடே போய்விடாலாம்..

இப்படி பேசுவதையெல்லாம் கேட்கும் போது மன உளைச்சல்தான் வருகிறது. எங்கள் மகளோடே போய்விடலாம் என்றுதான் தோன்றுகிறது என கதறினார். மேலும் அவள் வாங்கிய சொத்து எல்லாமே லோனில்தான் உள்ளது, அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளது என்றார்.

கோப படக்கூடாது என்றேன்

கோப படக்கூடாது என்றேன்

மேலும் என் பொண்ணு ஹேமந்தை நல்லவருன்னு சொன்னார். கோபம் வரும், 5 நிமிஷத்துல போயிடும் என்று சொன்னார். அதற்கு 5 நிமிஷ கோபத்துல என்ன வேண்டுமானாலும் நடக்கும் கோப படக்கூடாது என்று அட்வைஸ் செய்தேன். அதையெல்லாம் கேட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஹேமந்த் கூறினார் என்றார்.

பதிவு திருமணத்திற்கு பிறகு

பதிவு திருமணத்திற்கு பிறகு

மேலும் தனது மகள் மரணம் கொலைதான் என்று கூறியுள்ள விஜயா, பதிவு திருமணம் செய்த பிறகு ஹேமந்தின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ரொம்ப ரூடாக பேசினார். எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என அதட்டி பேசினார்.

சந்தேகப்பட்டார்

சந்தேகப்பட்டார்

சீரியலில் வரும் முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றார். சந்தேகப்பட்டும் பேசினார். சந்தேகம் வந்தால் வாழ்க்கையே வீணாகிப் போய்விடும் என்று சொன்னேன். இங்கே 10, 15 நாட்கள் தங்கியிருந்தார்கள். அப்போது சிறு சிறு பிரச்சனை வரும். இருவருக்கும் நான் அட்வைஸ் செய்தேன்.

ஹோட்டலில் ஏன் தங்கினார்?

ஹோட்டலில் ஏன் தங்கினார்?

தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி ஹோட்டலில் ஏன் தங்கினார்கள். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் என அந்த ஹோட்டலில் 4 நாட்கள் தங்கி 40 ஆயிரம் ரூபாய் ஏன் கொடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் விஜயா. இருவரும் ஹோட்டலில் தங்கிய விஷயம் தனக்கு தெரியாது.

அடிதடி ஆகியிருக்கலாம்

அடிதடி ஆகியிருக்கலாம்

மேலும் ஹேமந்துக்கு குடிப்பழக்கம் உண்டு தினமும் குடிப்பார். என் மகள் இறந்த நாள் அன்று இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. அடிதடி ஆகியிருக்கலாம், அதில் ஏதோ நடந்துள்ளது. என் மகள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.

எத்தனை மணிக்கு இறந்தார்?

எத்தனை மணிக்கு இறந்தார்?

எங்கெங்கோ உள்ளவர்களுக்கெல்லாம் 4 மணிக்கே என் மகள் இறந்த விஷயம் தெரிந்துள்ளது. ஆனால் பெற்றவளான எனக்கு காலை 5.15 மணிக்கு அவரது மாமனார் போன் பண்ணி சொல்கிறார். என் மகள் எத்தனை மணிக்கு இறந்தார் என்றே தெரியவில்லை.

Recommended Video

VJ Chitra Last show In Vijay TV | Tamil Filmibeat
நண்பர்களுக்கு தொடர்பு

நண்பர்களுக்கு தொடர்பு

அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால் ஏன் கன்னத்தில் தாடையில் எல்லாம் காயம் ஏற்பட வேண்டும்? தூக்குபோட்டுக் கொண்டவருக்கு கழுத்தில் ஒரு காயமும் இல்லை என்ற விஜயா தனது மகளின் மரணம் ஒரு கொலைதான் என்றார். மேலும் அதை ஹேமந்த்தான் செய்தாரோ அல்லது அவருடைய நண்பர்கள் செய்தார்களோ என்றும் சந்தேகம் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X