twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தன்மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய ஹேம்நாத் கோரிக்கை.. சித்ரா தந்தை பதிலளிக்க கோர்ட் உத்தரவு!

    |

    சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

    இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதையொட்டி அவரது கணவர் ஹேம்நாத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே தன்மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய ஹேம்நாத் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.

    சும்மா பக்கத்துல தான் நின்றேன்...விடுவிக்க கோரிய மீரா மிதுன் நண்பர்..மனுவை தள்ளுபடி செய்த கோர்ட் சும்மா பக்கத்துல தான் நின்றேன்...விடுவிக்க கோரிய மீரா மிதுன் நண்பர்..மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

    சின்னத்திரை நடிகை சித்ரா

    சின்னத்திரை நடிகை சித்ரா

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை போலீசார், அவரது கணவர் ஹேம்நாத், சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    கணவர் மீது குற்றப்பத்திரிகை

    கணவர் மீது குற்றப்பத்திரிகை

    சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தன்மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    சித்ரா தந்தை பதிலளிக்க உத்தரவு

    சித்ரா தந்தை பதிலளிக்க உத்தரவு

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுமீது சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் ஹேம்நாத் உள்ளிட்டோர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

    சித்ரா தந்தை இடையீட்டு மனு

    சித்ரா தந்தை இடையீட்டு மனு

    இதனிடையே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இதுகுறித்து சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

    சந்தேகங்களை எழுப்பிய மரணம்

    சந்தேகங்களை எழுப்பிய மரணம்

    பல சீரியல்களில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் தமிழில் ஒரு படத்திலும் நடித்து வந்தார். இந்நிலையில் இவரது திடீர் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. தொடர்ந்து பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். தங்களின் மகள் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Chennai HC ordered Chitra's father to answer that her husband request to cancel his Chargesheet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X