அப்படியெல்லாம் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணலனா ஹீரோயினே ஆக முடியாது.. ஷாக் கொடுத்த தேவி பிரியா!

சென்னை: சின்னத்திரையில் பிரபலமான நடிகை தேவி பிரியா சினிமாவில் நடக்கும் காஸ்டிங் கோச் பற்றி புட்டு புட்டு வைத்திருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

சின்னத்திரையில் சாதிக்கும் பல நடிகைகள் அடுத்ததாக வெள்ளித்திரைக்கு வர ஆசைப்படுவது வழக்கம் தான். அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தவர் நடிகை தேவி பிரியா.

தொடர்ந்து சினிமாவில் நடிக்காதது ஏன் என்கிற கேள்விக்கும் நடிகைகள் சினிமாவில் என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்கிற கேள்விக்கும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறிய விஷயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு

பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு

சினிமாவில் பல நடிகைகள் நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு தான் முன்னணி ஹீரோயின்களாக மாறி உள்ளனர் என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் ஏகப்பட்ட முன்னணி நடிகைகளின் பெயர்களோடே அவர்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

நடிகைகளும் அதே குற்றச்சாட்டு

நடிகைகளும் அதே குற்றச்சாட்டு

ஆனால், சில நடிகைகளும் சினிமாவில் இருக்கும் மோசமான அட்ஜெஸ்ட்மென்ட் டீலிங்குகள் பற்றி அடிக்கடி சொல்லி வருகின்றனர். சாதாரண யூடியூப் நடிகைக்கு கூட சினிமா சான்ஸ் தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், சினிமாவை ஒரு க்ரிஸ்டல் க்ளியர் இண்டஸ்ட்ரியாக மாற்ற முன்னணி நடிகர்களோ நடிகைகளோ எந்தவொரு முயற்சியையும் இதுவரை செய்ததாக தெரியவில்லை என்கின்றனர்.

சீரியல் நடிகை தேவி பிரியா

சீரியல் நடிகை தேவி பிரியா

ராஜிவ் மேனனின் மின்சார கனவு, கங்கை அமரனின் ஊரு விட்டு ஊரு வந்து, அஜித்தின் வாலி, விமலின் மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட சில படங்களில் நடித்த தேவிப்பிரியா பெரும்பாலும் சின்னத்திரையில் தான் அதிகமாக நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சக்தி சீரியலில் போதைக்கு அடிமையான கல்லூரி பெண்ணாக நடித்து அசத்தி இவர், பாரதிராஜாவின் தெக்கத்திப் பொண்ணு சீரியல் மூலம் பிரபலமானார். அத்திப்பூக்கள், ஆசைகள், அச்சம் மடம் நாணம், சொர்க்கம் என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும், நெகட்டிவ் கேரக்டர்களில் புகுந்து விளையாடி வரும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சொன்ன விஷயம் அனைவரையும் அச்சப்பட வைத்துள்ளது.

ஹீரோயினாக முடியாது

ஹீரோயினாக முடியாது

சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கு கூட பலருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. எல்லா ஆடிஷனும் முடிந்த பின்னரும் அட்ஜெஸ்ட்மெண்ட் எனும் கடைசி ஆப்ஷனை செக் செய்தால் தான் நடிகைகள் சினிமாவில் ஹீரோயினாகவே முடியும். ஒரு படத்தில் அறிமுகம் ஆகி விட்டு அடுத்த பட வாய்ப்புக்காக தேடும் நடிகைகளுக்கு இது பரவலாக ஏற்பட்டு வருகிறது என அதிர வைத்துள்ளார்.

காணாமல் போய்விடுவர்

காணாமல் போய்விடுவர்

இந்த தொல்லை தாங்க முடியாத நடிகைகள் பலர் ஒரு படத்துக்கு மேல் சினிமாவில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகிவிடுவார்கள். எனக்கு இதுவரை அதுபோன்ற பிரச்சனைகள் வந்தது கிடையாது. அப்படி யாராவது அணுகினால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். தேவிப்பிரியா போன்ற நல்ல நடிகைகள் அதிகமாக சினிமாவில் நடிக்காமல் போவதற்கு இதுதான் காரணமா? அல்லது இடை தரகர்கள் செய்யும் மோசடியா என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X