Don't Miss!
- Finance
70 நாடுகளில் முதலீடு செய்த சீனா.. அடுத்தது யாரெல்லாம் திவாலாக போகிறார்கள்..!
- Technology
ரூ.9,000 கூட இல்ல.. அதை விட கம்மி விலைக்கு Jio-வின் புதிய 5G போன்!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Sports
அவருக்கு இந்திய அணியில் வேலை இல்ல.. எங்க கூட கமெண்டரி பண்ண சொல்லுங்க.. DK வை சீண்டிய முன்னாள் வீரர்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
எனக்கு சிம்பு தான் வேணும்...நள்ளிரவில் சிம்பு வீடு முன் தர்ணா செய்த சீரியல் நடிகை
சென்னை : சீரியல் நடிகை ஒருவர் தனக்கு சிம்பு தான் வேண்டும் என கூறி, சிம்புவின் வீட்டின் முன் நள்ளிரவில் தர்ணா போராட்டம் நடத்தியதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிம்புவும், நடிகை நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சமீபத்தில் மீடியாக்களில் தகவல் பரவியது. ஆனால் சிம்பு தரப்பில் இருந்தோ, நிதி அகர்வால் தரப்பில் இருந்தோ அது பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை. சிம்பு தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார்.
குழந்தை லஷ்மியின் நியாயமான ஆசை.. பரிதவிக்கும் கண்ணம்மா -சௌந்தர்யா.. அடுத்தக்கட்டத்தில் தொடர்!

சினிமாவில் செம பிஸி
வெந்து தணிந்தது காடு படத்தை முடித்து விட்டு பத்து தல படத்திற்காக தயாராகி வருகிறார் சிம்பு. இதை முடித்து விட்டு டைரக்டர் கோகுல் இயக்கும் கொரோனா குமாரு படத்தில் நடிக்க போகிறார் சிம்பு. இது தவிர சில படங்களில் நடிக்க அவரிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிம்புவை திருமணம் செய்ய ரெடி
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீநிதி, சிம்புவை திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளதாக இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது கூறினார். இது பற்றி பேசி அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். பெரிய நடிகர்களை விமர்சிப்பது, அவர்களை பற்றி கருத்து தெரிவிப்பது போல் செய்பவர்கள் சீக்கிரம் பாப்புலராகி வருவதை வழக்கமாக வைத்திருப்பதால் ஸ்ரீநிதியும் அப்படி நடந்து கொள்கிறார் என யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

சேர்த்து வையுங்க ப்ளீஸ்
ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. ஜீ டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் ஜனனி என்ற ரோலில் நடித்து தமிழ் டிவி சீரியல் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் ஸ்ரீநிதி. இவர் தற்போது, சிம்புவுடன் தன்னை சேர்த்து வைக்கும்படி நள்ளிரவில் சிம்புவின் வீடு முன் தர்ணா நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவை வரச் சொல்லுங்க
எதற்காக தர்ணா, என்ன விஷயம் என கேட்டவர்களிடம், "ப்ளீஸ், தயவு செய்து எங்களை சேர்த்து வையுங்கள் " என கேட்டுள்ளார். தொடர்ந்து சிம்புவை வரச் சொல்லுங்கள். அவரை பார்க்காமல் நான் போக மாட்டேன் என கூறி அடம் பிடித்து, ரகளை செய்துள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் ஒரு வழியாக கஷ்டப்பட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்த பிறகே ஸ்ரீநிதி, சிம்பு வீட்டின் முன்பிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எதுக்கு இந்த திடீர் அலப்பறை
ஸ்ரீநிதியின் இந்த தொடர் செயல்களால் கோலிவுட்டே பரபரத்து போய் இருக்கிறதாம். ஆனால் சிம்பு இதுபற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருக்கிறாரே என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். அதே சமயம் ஸ்ரீநிதியின் இந்த திடீர் அலப்பறைகளுக்கு காரணம் புரியாமல் அனைவரும் திகைத்து போய் உள்ளனர்.