பிக்பாஸ் சீசன் 6 கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காதுபோல..இன்ஸ்டாவை திணறவிடும் நடிகை பங்கேற்பு?

சென்னை : பிக்பாஸ் சீசன் 6ல் கவர்ச்சியால் இணையத்தை திணறடித்து வரும் நடிகை பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

Recommended Video

கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணிக்கோங்க... செல்லம் கொஞ்சிய தர்ஷா குப்தா... எதுக்கு இப்படி சொல்லியிருக்காங்க?

விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் நடந்து முடிந்தது. இவற்றை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை காணும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியும் தொடங்கி முடிந்தது.

வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி

வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், பிரியங்கா இரண்டாம் இடத்தையும்,பாவ்னி 3வது இடத்தையும் பெற்றனர். இதையடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பானது, அந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்ட நிலையில், அடுத்த சில தினங்களில் பிக் பாஸ் சீசன் 6 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், பிக் பாஸ் சீசன் 5 அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதற்கு காரணம் போட்டியாளர்கள் புதியவர்களாக இருந்தது என்று கூறப்படுகிறது. இதனால், இந்த முறை போட்டியாளர்களை அதிக கவனத்துடன் தேர்ந்து எடுத்து வருகின்றனர். இதில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி, தொகுப்பாளினி டிடி, பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநிதி உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளது.

கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை

கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில், சீரியல் நடிகை தர்ஷா குப்தா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதன்பின்னர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தில் நாயகியாக நடித்தவர் தர்ஷா குப்தா. மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் கவர்ச்சிகரமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவர் பிக் பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X