Divya Sridhar: இந்த குயினுக்கு கிங் தேவையில்லை.. திவ்யா ஸ்ரீதர் வெளியிட்ட பதிவு!
சென்னை: சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் இணைந்து நடித்துவந்த அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
இதனிடையே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக திவ்யா, காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து அர்னவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

திவ்யா ஸ்ரீதர் புதிய பதிவு: சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துவந்த அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவரும் காதலித்து தங்களது மதங்களின் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். சிறிது நாட்களிலேயே திவ்யா கர்ப்பமான நிலையில், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவர் போலீசில் புகார் செய்திருந்தார். இதையடுத்து அர்னவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தற்போது அர்னவ் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். பல பெண்களை அர்னவ் ஏமாற்றியுள்ளதாக திவ்யாவும், அவர் மற்றொரு தொடர்பில் இருந்ததாக அர்னவும் புகார் தெரிவித்த நிலையில், கர்ப்பமாக இருந்த திவ்யாவிற்கு குழந்தை பிறந்து, தற்போது அவர் தன்னுடைய குழந்தையுடன் சூட்டிங்கிற்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வருகிறார். இதையடுத்து அவர் அடுத்தடுத்த விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அடுத்த வீடியோவில் கண்ணான கண்ணே பாடலுக்கு குழந்தையுடன் ஊஞ்சலில் இருந்தபடி வீடியோவும் வெளியிட்டுள்ளார். பெண் குழந்தைகள் எப்போதுமே தாயின் பொக்கிஷம் என்றும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பாசிட்டிவ் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாடர்ன் லுக்கில் அவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த குயினுக்கு கிங் தேவையில்லை என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களை தற்போது வெகுவாக கவர்ந்து அதிக லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.
தொடர்ந்து தற்போது செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் இவரது கேரக்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அர்னவ் மீது இவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் புகார்களை அளித்து வருகிறார். அர்னவ் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் ஒரு பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார். இதற்கு தொடர்ந்து அர்னவ் பதிலடி கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











