சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லாவுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: பிரபல சுந்தர சீரியல் நடிகை கேப்ரில்லா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 4 லட்சத்தை தாண்டி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் பாதிப்பு
சினிமா பிரபலங்களும் கொரோனாவுக்கு தப்பவில்லை. தமிழ் சினிமா வரிசையாக பல நட்சத்திரங்களை கொரோனாவுக்கு பறிகொடுத்து வருகிறது. பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும் வீட்டில் இருந்தப்படியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுந்தரி சீரியல் நடிகை
இன்று ஒரே நாளில் தமிழ் சினிமா கொரோனாவுக்கு நடிகர் பாண்டு, கோமகன் ஆகிய இரண்டு பேரை இழந்துள்ளது. இந்நிலையில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை கேபிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெரும் வரவேற்பு
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், தனது கனவுகளை அடைய அவர் போராட்டத்தையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

கொரோனா தொற்று
இந்த சீரியலில் சுந்தரியாக நடித்து வரும் கேப்ரியெல்லா செல்லஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில்
தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனக்கும் கன்ஃபாம் ஆயிடுச்சு
அதில் ரொம்ப சாதாரணமாக நினைச்சிடாதீங்க மாஸ்க் போடாம வெளிய போகாதீங்க. பாதுகாப்பாக இருங்க. கடைசியா எனக்கும் கோவிட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று அவர் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதனால் சுந்தரி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











