Vijay: தளபதி விஜய்க்குதான் என்னோட ஓட்டு.. சின்னத்திரை பிரபல நடிகை பளீச்.. ஆனா அதுமட்டும் முடியாதாம்!

சென்னை: நடிகர் விஜய் சேர்த்துள்ள சொத்துக்களில் முக்கியமானது அவரது வெறித்தனமான ரசிகர்கள்தான். அடுத்தடுத்து படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் விஜய், கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தன்னுடைய அரசியில் என்ட்ரியை அறிவித்திருந்தார். அத்துடன் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருத்துள்ளார்.

அவரது அரசியல் என்ட்ரி மிகப்பெரிய கவனத்தையும் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றாலும், ஏன் சினிமாவிலிருந்து விலகுகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. எம்ஜிஆர் உள்ளிட்ட பல பிரபலங்களும் அரசியலில் இருந்துக் கொண்டே சினிமாவிலும் நடித்த நிலையில், விஜய்யின் சினிமாவிலிருந்து விலகும் முடிவு ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Vijay Thalapathy 69 movie Alya manasa

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், பாபி தியோல் பாபி தியோன் இந்த படத்தின் வில்லனாக இணைந்துள்ளார். நடிகர் விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தை அரசியல் ஜானரில் ஹெச் வினோத் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் என்ட்ரி கொடுத்த விஜய்: 2026ம் ஆண்டில் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தளபதி 69 படம் அதற்கான டூலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய அரசியல் கட்சியை அடுத்தடுத்து பலப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அவரது ஒவ்வொரு செயலும் உற்று நோக்கப்படுகிறது. பல விமர்சனங்களை விஜய் அடுத்தடுத்து பிரபலங்களிடம் இருந்து பெற்று வருகிறார். ஆனால் ரசிகர்கள் அவருக்கு அடுத்தடுத்து கை கொடுத்து வருகின்றனர்.

விஜய்க்குத்தான் என்னோட ஓட்டு: இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தன்னுடைய ஓட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத்தான் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக செயல்பட நேரம் இருக்காது என்று கூறியுள்ள ஆல்யா ஆனால் தன்னுடைய ஓட்டை விஜய்க்குதான் போடுவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இது போன்ற வெறித்தனமான பல ரசிகர், ரசிகைகளை பெற்றுள்ளார் விஜய். அவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெருகி வருவது இவர்களின் இத்தகைய பேச்சுக்களால் வெளிப்பட்டு வருகிறது. அவரது அரசியல் என்ட்ரி சிறப்பாக அமையுமா என்பது 2026ல் தெரியும்.

அரசியல் செயல்பாடுகள்: தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்துவரும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளார் விஜய். ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் வரை விஜய் சம்பளமாக பெற்றுவருவதாக கூறப்படும நிலையில், அதை விட்டுவிட்டு விஜய் அரசியலில் ஈடுபட உள்ளது கேள்விகளை எழுப்பி வருகிறது. ஆயினும் தொடர்ந்து அடுத்தடுத்த கட்சி செயல்பாட்டில் விஜய் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்திருந்தார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X