பிரபல டி.வி நடிகை அம்மா மீது தாக்குதல்.. வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்.. 10 பேர் மீது வழக்கு!

By

கொச்சி: பிரபல சின்னத்திரை நடிகையின் அம்மாவை தாக்கி, வீட்டை அடித்து நொறுக்கியதாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

நாடு தான் முக்கியம்... TikTok-ல் இருந்து வெளியேறிய பிக்பாஸ் நடிகை

பிரபல மலையாள சீரியல் நடிகை, அர்ட்ரா தாஸ் (Ardra Das). சில சீரியல்களில் நடித்துள்ள இவர் மலையாள ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

இவரது வீடு திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு என்ற பகுதியில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கும்பல் இவரது வீட்டுக்கு வந்துள்ளது.

ஆபாசமாகத் திட்டினர்

ஆபாசமாகத் திட்டினர்

அப்போது அவர் வீட்டில் நடிகை அர்ட்ரா தாஸின் அம்மா சிவகுமாரி மட்டுமே இருந்துள்ளார். திடீரென்று வீட்டுக்குள் புகுந்த அவர்கள், நடிகையின் அம்மாவை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். பின்னர் அவரை ஆபாசமாகத் திட்டிவிட்டு, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். பூந்தொட்டிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் இந்தத் தாக்குதலில் உடைந்து நொறுங்கின

குடிபோதையில்

குடிபோதையில்

பின்னர், அவரை மிரட்டிவிட்டு அந்தக் கும்பல் சென்றுவிட்டது. இந்த தகவல் சிவகுமாரியின் உறவினர்களுக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குடிபோதையில் அந்தக் கும்பல் அப் பகுதியில், அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாக சிவகுமாரி, போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

நடிகையின் அம்மா

நடிகையின் அம்மா

அதற்குப் பழிவாங்கும் விதமாக, இந்த தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர். இதையடுத்து சிவகுமாரி, பழயனூர் போலீஸ் ஸ்டேஷனில் அந்தக் கும்பல் மீது புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரித்த போலீசார், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முன்னதாக, பக்கத்து வீட்டினரை கல்லால் தாக்கியதாக, நடிகையின் அம்மா சிவகுமாரி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

எல்லை பிரச்னை

எல்லை பிரச்னை

இந்தப் பிரச்னை பற்றி போலீசார் கூறும்போது, 'நடிகையின் வீட்டுக்கும் அவர்களது பக்கத்து வீட்டுக்கும் எல்லை தொடர்பாக ஏற்கனவே பிரச்னை இருக்கிறது. இந்தப் பிரச்னை கடந்த சில வருடங்களாக இருக்கிறது. அதன் காரணமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றனர். சம்பவம் நடந்தபோது நடிகை அர்ட்ராவும் அவர் தந்தையும் திருவனந்தபுரம் சென்றிருந்ததால் வீட்டில் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X