நண்ணுவை பாத்துக்கோ.. பத்திரமா இரு.. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சிக்கு முன் மகளுக்கு அனுப்பிய வாய்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சி முன்பாக தனது மகளுக்கு அனுப்பிய ஆடியோ மெஸேஜ் வைரலாகி வருகிறது.
வம்சம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ. இவரது கணவர், தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர். நடிகை ஜெயஸ்ரீக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் தனது கணவர் ஈஸ்வர் தன்னுடன் சீரியலில் நடிக்கும் நடிகை மகாலட்சுமியுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும் தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார்.

தவறான தொடர்பு
இந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், ஜாமினில் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

அமைதியாக
கணவன் மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர். கடந்த சில நாட்களாக இந்த விவகாரத்தில் எந்த தகவலும் இல்லாமல் ஜெயஸ்ரீ, ஈஸ்வர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் அமைதியாக இருந்து வந்தனர்.

தற்கொலை முயற்சி
இந்நிலையில் கடந்த வாரம் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றார். குடும்ப பிரச்சனையால் தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

போட்டோக்கள் வைரல்
இதையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வாழ தகுதியில்லை
இந்நிலையில் ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சிக்கு முன்னதாக மகளுக்கு ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ரேஸ்.. எனக்கு சரியாக தெரியவில்லை. நான் தற்போது அதிக மன அழுத்தத்தில் இருக்கிறேன். எனக்கு வாழ்வதற்கு தகுதியும் இல்லை.

பத்திரமா இரு
என்னை இத்தனை நாட்களாய் நீ என்னை பார்த்து கொண்டதற்கு, இந்த வாய்ஸ் ஆடியோ பதிவை அனுப்புகிறேன். உனக்கு நன்றி.. எனக்கு அதிகளவு தைரியம் சொல்லிருக்க.. முடிந்தால் அவ்வப்போது நண்ணுவை பார்த்துக்கொள்.. பார்த்து பத்திரமா இரு.. என்பதுடன் இந்த ஆடியோ பதிவு கண்ணீருடன் நிறைவு பெற்றுள்ளது.

சின்னத்திரை கவலை
ஜெயஸ்ரீயின் இந்த உருக்கமான ஆடியோ பதிவு சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நடிகை ஜெயஸ்ரீ எழுதி வைத்திருந்த இரண்டு பக்க கடிதம் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











