முதல் திருமணத்தை மறைத்த டிவி நடிகை.. குடும்பத்துடன் வந்து தகராறு செய்த துணை இயக்குநர்!

சென்னை: முதல் திருமணத்தை மறைத்த டிவி நடிகை வீட்டில் காதலரான துணை இயக்குநர் குடும்பத்துடன் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Vj Chithra -வா ஆகிட கூடாது! Sembaruthi Serial Actress Jenifer கண்ணீர் பேட்டி

சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். 24 வயதான இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் நடித்து வருகிறார்.

இவருக்கு 2019ஆம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

துணை இயக்குநருடன் காதல்

துணை இயக்குநருடன் காதல்

இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஜெனிஃபருக்கு தான் நடிக்கும் சீரியலில் பணியாற்றும் துணை இயக்குநரான நவீன் குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

திருமணத்தை மறைத்த நடிகை

திருமணத்தை மறைத்த நடிகை

இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெனிஃபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து வழக்கு நடந்து வருவதை மறைத்ததாக கூறி நவீன்குமார் ஜெனிஃபர் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது ஜெனிஃபர் அவரை திட்டி அனுப்பி உள்ளார்.

தாக்கப்பட்ட நவீன்

தாக்கப்பட்ட நவீன்

அப்போது ஜெனிஃபர் அப்பா பெரியநாயகம் அவரது மகன் ஆகியோர் நவீன்குமாரிடம் ஏன் வீட்டிற்கு வந்து தகராறு செய்தாய் என கேட்டுள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் பெரியநாயகத்திற்கு நவீன் குமார் தாக்கப்பட்டார்.

இரு குடும்பத்துக்கும் அடிதடி

இரு குடும்பத்துக்கும் அடிதடி

இதனால் நவீன்குமார் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு தனது தந்தையான உதயகுமாருக்கு தகவல் தெரிவித்தார். உதயகுமார் நான்கு பேருடன் ஜெனிபர் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே அடிதடி நடந்துள்ளது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இருதரப்பிலும் கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக இருவரும் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசை காட்டினார்

ஆசை காட்டினார்

இதனிடையே ஜெனிஃபர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டினார்.

மிரட்டி பணம் பறிக்கிறார்

மிரட்டி பணம் பறிக்கிறார்

அந்த ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அவருக்கு தொலைக்காட்சி தொடர் துணை இயக்குனர் வேலை போய்விட்டது. அதனால் என்னை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். ரூ.2½ லட்சம் வரை பணம் கொடுத்துள்ளேன்.

ஏற்கனவே கைதானார்

ஏற்கனவே கைதானார்

என்னை மிரட்டி அரை நிர்வாண கோலத்தில் படம் பிடித்தார். அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டார். அடித்து துன்புறுத்தினார். அவர் மீது மணலி போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உயிருக்கு ஆபத்து

உயிருக்கு ஆபத்து

ஆனால் ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார் வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி தொடர்ந்து மிரட்டுகிறார். என்னை அரைநிர்வாணமாக எடுத்த படங்களை அவரிடம் இருந்து போலீசார் மீட்டுத் தரவேண்டும். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Read more about: jenifer vanathai pola
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X